காலை காலை 10:30 மணிவரை கெடு! நிபந்தனையுடன் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்!
விக்ரம் - கௌதம் மேனன் காம்பினேஷனில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை வெளியிட, நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு... பின்னர் மீண்டும் தூசு தட்டப்பட்ட 'துருவ நட்சத்திரம்' திரைப்படம், நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீசாக இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், இதுவரை இபபடத்தின் புரமோஷன் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது. எனவே இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.
வெளிநாடுகளிலும், பெங்களூரு, மும்பை போன்ற அண்டை மாநிலங்களில் இப்படத்தின் முன்பதிவு தொடங்கி விட்டதாக சில தகவல்கள் வெளியானாலும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்னும் முன்பதிவு தொடங்காமல் இருப்பது தான் ரசிகர்களின் இந்த சந்தேகத்துக்கு காரணம். இந்நிலையில் ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை கொடுக்காமல் இப்படத்தை வெளியிட கூடாது என, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதி மன்றம், நிபந்தனையுடன் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, "ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும்.. என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது என நீதிபதி சரவணன் கூறியுள்ளார்.
சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டு, ரூ. 2.40 கோடியை பெற்ற கௌதம் மேனன் படத்தை முடிக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா பணத்தை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க தொடர்ந்த வழக்கு தான் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு தடைக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல். செய்து பணத்தை திருப்பி அளிக்கவில்லை என்றால் படத்தை வெளியிடமாட்டோம் என கூறியுள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Suriya: விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா! மருத்துவமனையில் அனுமதி.!