Suriya: விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா! மருத்துவமனையில் அனுமதி.!
நடிகர் சூர்யா விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
tamil actor suriya sivakumar injured in an accident while shooting kanguva
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சூர்யா சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Suriya
இயக்குனர் சிவா, 'அண்ணாத்த' படத்திற்கு பின்னர் நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகினறனர்.
Suriya
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட இந்த படம், 3டி டெக்னாலஜியுடன் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் சுமார், 350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிகிலையில் சண்டை காட்சி எடுத்து கொண்டிருந்த போது, ரோப் கேமரா அறுந்து விழுந்த நிலையில், சூர்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நூல் இழையில் உயிர் தப்பிய இவர், தற்போது... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் சில மணிநேரம், படப்பிடிப்பு தற்போது.. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது