MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இரண்டாவது குழந்தைக்கு தந்தையானார் 'அயலான்' பட இயக்குனர் ஆர்.ரவிக்குமார்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

இரண்டாவது குழந்தைக்கு தந்தையானார் 'அயலான்' பட இயக்குனர் ஆர்.ரவிக்குமார்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 01 2024, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ravikumar

Ravikumar

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான, 'நேற்று இன்று நாளை' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர் ரவிக்குமார். தன்னுடைய முதல் படத்தையே சயின்ஸ் பிக்சன் காமெடி திரைப்படமாக இயக்கி இருந்தார். அதாவது இப்படம் டைம் ட்ராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடித்திருந்தார்.
 

25

முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன், பிஎம் கார்த்திக், ரவிசங்கர், ஜெயபிரகாஷ், பகவதி பெருமாள், அனுபமா குமார், முனீஸ்காந்த், சாய் தீனா, உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதேபோல் நடிகர் ஆர்யா கேமியோ ரோலில் இப்படத்தில் நடித்திருந்தார்.

கர்ப்பத்தை அறிவித்த பின்.. கணவர் ரன்வீருடன் ஏர்போர்ட் வந்த தீபிகா படுகோன்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

 

35

இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களாலும், திரையுலக பிரபலங்களாலும், கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார். இதை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தை யாரை வைத்து இயக்குனர் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். இந்த திரைப்படமும் சயின்ஸ் பிக்சன் திரைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அதாவது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஏலியன் பற்றிய கதைக்களத்துடன் இந்த படம் உருவான நிலையில், இப்படம் எடுத்து முடிக்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே சமீபத்தில் வெளியானது.

45

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'அயலான்' படம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது மட்டும் இன்றி, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.  இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கு தற்போது தயாராகி வருகிறார்.

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் 'த்ரிஷ்யம்'! அட இந்த படத்திற்கு இப்படி ஒரு ஸ்பெஷலா..? குவியும் வாழ்த்துக்கள்!

55

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு, பிரியா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு நறுமுகை என்கிற மகள் ஒருவர் உள்ளார். இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த பிரியாவுக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ள தகவலை,  தன்னுடைய சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved