MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... கர்ப்பகாலத்தில் கணவர் செய்த உதவியால் அமலா பால் நெகிழ்ச்சி

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... கர்ப்பகாலத்தில் கணவர் செய்த உதவியால் அமலா பால் நெகிழ்ச்சி

கர்ப்பகாலத்தில் தன்னை அன்பாக பார்த்துக் கொள்ளும் தனது கணவர் ஜெகத் தேசாய்க்கு நன்றி தெரிவித்து நடிகை அமலா பால் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : May 07 2024, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகை அமலா பாலின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இவர் கடந்த 2013-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களது திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். அமலா பாலை விவாகரத்து செய்து பிரிந்த அடுத்த சில ஆண்டுகளில் இயக்குனர் ஏ.எல்.விஜய் மறுமணம் செய்துகொண்டார்.

25

ஆனால் நடிகை அமலா பால் மறுமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த அமலா பால், கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இவர்களது திருமணம் கடந்த நவம்பர் மாதம் கேரளாவில் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... Robo Shankar : ஊரே மெச்சும் அளவுக்கு மகள் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்தியது ஏன்? ரோபோ சங்கர் சொன்ன சீக்ரெட்

35

திருமணமான இரண்டே மாதங்களில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்ட அமலா பால், அடிக்கடி கர்ப்பகால போட்டோஷூட்டையும் நடத்தி வருகிறார். அண்மையில் நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு நடைபெற்றது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், இந்த கர்ப்ப காலத்தில் தனது கணவர் ஜெகத் தேசாய் தனக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்தார் என்பதை பற்றி நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு உள்ளார்.

45

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது : “தாமதமான இரவுகளிலும் என் பக்கத்தில் நீ இருந்தாய். என் அசௌகரியங்களை மெது மெதுவாகத் தணித்து, என் மீதான உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் எனக்கு தெம்பூட்டும் உங்களின் உற்சாகமான வார்த்தைகள் வரை, இந்த விலைமதிப்பற்ற கர்ப்ப கால பயணத்தின் போது எனக்கு பக்கபலமாக இருந்ததற்கு நன்றி. 

55

என் நம்பிக்கை குலைந்த சின்னஞ்சிறு தருணங்களில் கூட எனக்கு ஆதரவாக இருந்த நீ என் இதயத்தை நன்றியுடனும் அன்புடனும் நிரப்புகிறாய். உன்னைப் போன்ற ஒரு மனிதன் என் வாழ்க்கையில் கிடைத்ததற்கு உண்மையிலேயே நான் நன்றிக்கடன் செய்திருக்க வேண்டும். எனது நிலையான  அன்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவாக இருப்பதற்கு நன்றி. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... அன்று திரைப்படங்களில் நடிக்க தடை.. பிரேக் அப் ஆன நிச்சயதார்த்தம்.. ஆனா இன்று பான் இந்தியா நடிகை..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved