MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Robo Shankar : ஊரே மெச்சும் அளவுக்கு மகள் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்தியது ஏன்? ரோபோ சங்கர் சொன்ன சீக்ரெட்

Robo Shankar : ஊரே மெச்சும் அளவுக்கு மகள் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்தியது ஏன்? ரோபோ சங்கர் சொன்ன சீக்ரெட்

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் கடந்த மார்ச் மாதம் மதுரையில் வைத்து மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

2 Min read
Author : Ganesh A
Published : May 07 2024, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indraja robo shankar

Indraja robo shankar

விஜய் டிவியில் கலக்கப்போவது யார், அது இது எது போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் ரோபோ சங்கர். சின்னத்திரையில் கிடைத்த பாப்புலாரிட்டியை பயன்படுத்தி வெள்ளித்திரைக்குள் நுழைந்த ரோபோ சங்கர், தனுஷின் மாரி, விஷணு விஷாலுடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், அஜித்தின் விஸ்வாசம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

24
Indraja Robo Shankar Marriage

Indraja Robo Shankar Marriage

ரோபோ சங்கரை போல் அவரது மகள் இந்திரஜாவும் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார். அந்த வகையில் அவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் பிகில். அட்லீ இயக்கிய இப்படத்தில் பாண்டியம்மா என்கிற சிங்கப்பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் இந்திரஜா. இதையடுத்து முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் இந்திரஜா. இந்த இரண்டு படங்களுமே ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... வெறும் 250 ரூபா சம்பளம்... நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு தாவியது எப்படி? சிவாஜியின் பிளாஷ்பேக் பேட்டி

34
robo shankar Daughter Indraja wedding

robo shankar Daughter Indraja wedding

இதையடுத்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென திருமணம் செய்துகொண்டார் இந்திரஜா. அவரின் திருமணம் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி மதுரையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சென்னையில் செம்ம கிராண்ட் ஆக நடைபெற்ற இந்திரஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த கோலிவுட் பிரபலங்களும் படையெடுத்து வந்து கலந்துகொண்டனர். மகளின் திருமணத்திற்காக ரோபோ சங்கர் பல கோடி செலவு செய்திருந்தார்.

44
Robo Shankar

Robo Shankar

இந்நிலையில், மகளின் திருமணத்தை ஊரே மெச்சும் அளவுக்கு நடத்தியதற்கான காரணத்தை ரோபோ சங்கர் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதன்படி அவர் கூறியதாவது : “என்னுடைய திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. எனது திருமணத்தில் மனைவி வீட்டில் இருந்து சிலர் கலந்துகொண்டார்கள். என் வீட்டில் இருந்து நான் மட்டுமே கலந்துகொண்டேன். அந்த அளவு எளிமையாக நடந்ததால், மகளின் திருமணத்தை படு கிராண்டாக நடத்த ஆசைப்பட்டேன். அதன்படியே நடத்திவிட்டேன்” என ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஏற்காட்டில் பேமிலியோடு ஜாலியாக டிரக்கிங் சென்ற கோலிவுட்டின் மஞ்சும்மல் பாய்ஸ்... வைரலாகும் போட்டோஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved