MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வெறும் 250 ரூபா சம்பளம்... நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு தாவியது எப்படி? சிவாஜியின் பிளாஷ்பேக் பேட்டி

வெறும் 250 ரூபா சம்பளம்... நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு தாவியது எப்படி? சிவாஜியின் பிளாஷ்பேக் பேட்டி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தான் சினிமாவிற்குள் நுழைந்ததன் ஆச்சர்ய பின்னணியை பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 07 2024, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
parasakthi

parasakthi

தமிழ் சினிமா வரலாற்றில் காலம் கடந்து கொண்டாடப்படும் நடிகர்களுள் சிவாஜி கணேசனும் ஒருவர். இதற்கு காரணம் அவரின் அசத்தலான நடிப்பும் மிரட்டலான டயலாக் டெலிவரியும் தான். சிவாஜி கணேசன் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் என்று சொன்னாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரின் முதல் படமான பராசக்தி தான்.

24
parasakthi movie

parasakthi movie

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பேசும் வசனங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் வரை நாடகக் கலைஞராக பணியாற்றி வந்த சிவாஜி கணேசன், தனக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைத்தது எப்படி என்பது குறித்து பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Aranmanai 4 : வசூலில் ரஜினி படத்தை ஓவர்டேக் செய்த அரண்மனை 4... பாக்ஸ் ஆபிஸில் படைத்த புது சாதனை

34
Sivaji ganesan debut movie parasakthi

Sivaji ganesan debut movie parasakthi

அந்த பேட்டியில் அவர் பேசியதாவது : “அந்த காலத்தில் தேவி நாடக சபா என்கிற நாடக கம்பெனியை ரத்னம் நடத்தி வந்தார். அதில் பாவலர் பாலசுப்ரமணியம் எழுதிய பராசக்தி என்கிற நாடகத்தை நடத்தி வந்தனர். அந்த நாடகத்தை என்னுடைய தெய்வம் பி.ஏ.பெருமாளும், ஏவிஎம் அவர்களும் சென்று பார்த்துள்ளார்கள். அப்போது அந்த நாடகம் மிகவும் பிடித்துப் போனதால் சினிமா எடுப்பதற்காக அந்த நாடகத்தின் உரிமத்தை வாங்கிவிட்டார்கள்.

44
Sivaji Ganesan cinema Entry

Sivaji Ganesan cinema Entry

பின்னர் அந்த சினிமாவில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்கிற பிரச்சனை வருகிறது. பெருமாள் என்னுடைய பெயரையும் சொல்லியிருக்கிறார். நான் அந்த சமயத்தில் சக்தி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அங்கிருந்து அழைப்பு வந்தது. எனது சினிமா உலக ஆரம்பமே விமானத்தில் தான் தொடங்கியது. பின்னர் டெஸ்ட் ஷூட் நடத்தினார்கள்.

இதையடுத்து ஊருக்கு சென்றுவிட்டேன். மறுபடியும் என்னை அழைத்து சினிமாவில் நடிப்பதற்காக 5 வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டார்கள். அப்போது என்னுடைய சம்பளம் மாதம் 250 ரூபாய், அப்படி தான் என்னுடைய சினிமா உலகத்தின் பயணம் ஆரம்பமானது” என சிவாஜி கணேசன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ஏற்காட்டில் பேமிலியோடு ஜாலியாக டிரக்கிங் சென்ற கோலிவுட்டின் மஞ்சும்மல் பாய்ஸ்... வைரலாகும் போட்டோஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பராசக்தி
சிவாஜி கணேசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved