ஏற்காட்டில் பேமிலியோடு ஜாலியாக டிரக்கிங் சென்ற கோலிவுட்டின் மஞ்சும்மல் பாய்ஸ்... வைரலாகும் போட்டோஸ்
கோலிவுட் நடிகர்களான சாந்தனு, விக்ராந்த், பரத், கலையரசன் ஆகியோர் தங்கள் குடும்பத்தினரோடு ட்ரெக்கிங் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகர் பாக்கியராஜின் மகனான சாந்தனு, தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருகிறார். 15 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் திண்டாடி வந்த நடிகர் சாந்தனுவுக்கு அண்மையில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ப்ளூ ஸ்டார் படத்தில் சாந்தனு உடன் அசோக் செல்வன், கலையரசன், பாண்டியராஜன் மகன் பிருத்வி ஆகியோரும் நடித்திருந்தனர். ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியால் செம்ம குஷியில் இருக்கும் நடிகர் சாந்தனு தற்போது தனது கோலிவுட் நண்பர்களுடன் இணைந்து ஏற்காடுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஸ்டார் முதல் ரசவாதி வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?
நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், ஆதவ் கண்ணதாசன் ஆகியோரும் இந்த சுற்றுலாவுக்கு தங்கள் பேமிலியோடு சென்றிருக்கின்றனர். ஏற்காட்டில் நண்பர்களோடு டிரக்கிங் சென்றபோது எடுத்த புகைப்படங்களை சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்த பதிவில் நண்பர்களுடன் இயற்கையில் தொலைந்துவிட்டோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சென்று வந்தோம் என குறிப்பிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் தான் கோலிவுட்டின் மஞ்சும்மல் பாய்ஸா என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
சாந்தனுவின் இந்த ஏற்காடு சுற்றுலாவில் நடிகையும் தொகுப்பாளினியுமான டிடி-யின் முன்னாள் கணவரும் சென்றிருக்கிறார். டிடியும் ஸ்ரீகாந்தும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையும் படியுங்கள்... Raayan First Single: தனுஷ் நடிக்கும் 'ராயன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ். எப்போது? சன் பிச்சர்ஸ் தகவல்!