MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Aranmanai 4 : வசூலில் ரஜினி படத்தை ஓவர்டேக் செய்த அரண்மனை 4... பாக்ஸ் ஆபிஸில் படைத்த புது சாதனை

Aranmanai 4 : வசூலில் ரஜினி படத்தை ஓவர்டேக் செய்த அரண்மனை 4... பாக்ஸ் ஆபிஸில் படைத்த புது சாதனை

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் திரைக்கு வந்துள்ள அரண்மனை 4 திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 07 2024, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Aranmanai 4

Aranmanai 4

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு தனி மவுசு உண்டு. இதன் காரணமாக காஞ்சனா, அரண்மனை, தில்லுக்கு துட்டு, பீட்ஸா போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்த பாகங்களாக உருவாகி வருகின்றனர். காஞ்சனா திரைப்படம் இதுவரை மூன்று பாகங்களாக ரிலீஸ் ஆகி உள்ளது. அதே போல் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படம் இரண்டு பாகங்களாகவும், பீட்ஸா திரைப்படம் மூன்று பாகங்களாகவும் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றன.

24
Aranmanai 4 Collection

Aranmanai 4 Collection

அந்த வரிசையில், தமிழ் சினிமாவின் முதல் நான்காம் பாக திரைப்படமாக அரண்மனை திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் இதற்கு முன்னர் ரிலீஸ் ஆன மூன்று பாகங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை ருசித்ததால், அதன் நான்காம் பாகத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஏற்காட்டில் பேமிலியோடு ஜாலியாக டிரக்கிங் சென்ற கோலிவுட்டின் மஞ்சும்மல் பாய்ஸ்... வைரலாகும் போட்டோஸ்

34
Aranmanai 4 Box Office

Aranmanai 4 Box Office

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு புதுப்படங்கள் எதுவும் பெரியளவில் சோபிக்கவில்லை. அந்த டிரெண்டை அரண்மனை 4 திரைப்படம் தகர்த்தெறிந்து உள்ளது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. அதன்படி அரண்மனை 4 திரைப்படம் முதல் மூன்று நாட்களில் இந்திய அளவில் 19.75 கோடியும், உலகளவில் 23 கோடியும் வசூலித்து இருந்த நிலையில், தற்போது அப்படத்தின் நான்காம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

44
Aranmanai 4 Day 4 Box Office Collection

Aranmanai 4 Day 4 Box Office Collection

அதன்படி அரண்மனை 4 திரைப்படம் நான்காம் நாளான நேற்று இந்தியாவில் மட்டும் ரூ.3 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் உலகளவில் நான்கே நாட்களில் ரூ.25 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு திரைக்கு வந்த லால் சலாம் திரைப்படம் நான்கு நாட்களில் வெறும் ரூ.11 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில், அரண்மனை 4 திரைப்படம் அதைவிட டபுள் மடங்கு வசூலை வாரிக்குவித்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்... ஸ்டார் முதல் ரசவாதி வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமன்னா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved