Parithabangal Gopi : இந்த டிஜிட்டல் யுகத்தில் YouTube மூலம் இன்று புகழின் உச்சியில் இருக்கும் இருவர் தான் பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர்.

சிவகங்கை பகுதியை சேர்ந்த கோபி மற்றும் அவரது நண்பர் சுதாகர் ஆகிய இருவரும் சென்னைக்கு வந்து கலை உலகில் தங்களுக்கான வாய்ப்பை தேடி அலைந்து, பல மேடைகளில் அதனை வெளிப்படுத்தி இன்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றால் அது மிகையல்ல. பரிதாபங்கள் என்கின்ற ஒரு youtube சேனலை துவங்கி அவர்கள் வெளியிட்டு வரும் அனைத்து வீடியோக்களும் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. 

அதிலும் குறிப்பாக அன்னையர் தினத்திற்கு அண்மையில் அவர்கள் வெளியிட்டிருந்த "அன்னையர் தின பரிதாபங்கள்" மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இந்நிலையில் பரிதாபங்கள் கோபியிடம் அவரது குடும்பத்தை குறித்து ஒரு தனியார் செய்து நிறுவனம் ஒரு பேட்டியில் கேட்ட பொழுது, எனது தாயும் தந்தையும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

Sneha: என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்ததற்கும் நன்றி! அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை பகிர்ந்த சினேகா!

சிறு வயது முதலிலேயே என்னுடைய படிப்பிற்கும், வாழ்க்கைக்கும் அனைத்து விதத்திலும் ஊன்றுகோலாக இருந்தது அவர்கள் மட்டுமே. நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால், அவர்கள் கையில் பணம் இல்லை என்றால் கூட எப்படியாவது எனக்கு ஏதோ ஒரு பரிசு பொருளை வாங்கி கொடுத்து என்னை ஊக்கப்படுத்துவார்கள். 

சென்னைக்கு நானும் சுதாகரும் வந்த புதிதில் எங்களுக்கு பணம் அனுப்ப முடியவில்லை என்று பல நாள் அவர்கள் ஏங்கியது உண்டு. ஆனால் இன்று நாங்கள் இருவரும் ஒரு நல்ல நிலைமையில் இருக்கின்றோம், எனக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் என் தாய் தந்தையரை என் சொந்த ஊரில் தனியே விடாமல் அவர்களை சென்னை அழைத்து வந்து கூட்டு குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம். 

காரணம் என் தாய் தந்தையருக்கு நான் சிறு வயது முதல் எதுவும் பெரிதாக செய்ததில்லை. அதிலும் குறிப்பாக என் தாய்க்கு அவருடைய உடலில் ஒரு பிரச்சனை இருந்தது, சிறுவயது முதலிலேயே கோழி ரக்கையை கொண்டு காதுகளை சுத்தப்படுத்தும் பழக்கம் எனது தாய்க்கு உண்டு. ஆனால் நாளடைவில் நாங்கள் அதை கவனிக்காமல் விட்டபொழுது அவருக்கு காது கேளாத பிரச்சனை பெரிய அளவில் ஏற்பட்டது. 

அவருக்கு அப்படி ஒரு பிரச்சனை இருந்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பல நாட்கள் அழுது இருக்கிறேன். ஆனால் இன்று நான் நல்ல முறையில் சம்பாதிக்கிறேன், அண்மையில் சுமார் 80 ஆயிரம் ரூபாயில் அவருக்கு ஒரு காது கேட்கும் இயந்திரத்தை வாங்கி கொடுத்தேன். ஏன் எனக்கு இவ்வளவு செலவு செய்து இந்த பொருளை வாங்கி கொடுக்கிறாய், என்று பலமுறை என்னை என் அம்மா கேட்டிருக்கிறார். 

ஆனால் உனக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்று அவரிடம் கூறுவேன். மகன் செய்வது நல்ல விஷயம் தான் என்று என்னை நம்பி எனக்கு எல்லாம் செய்து வளர்த்தவர்கள் என் பெற்றோர், அவர்களுக்கு திரும்ப செய்வதே சிறந்த கைமாறாக இருக்கும் என்று அவர் கூறினார். 

Thug Life Movie : ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் மணிரத்னம்.. லியோ பட சாதனையை உடைத்த "ஆண்டவர்" - என்னப்பா அது?