கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி? நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?
கிழிந்த ரூபாய் நோட்டு வைத்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை. அதைக் கொடுத்துப் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.
torn currency notes, rupees, damaged notes, RBI, Banks, Exchange currency notes, Reserve Bank of India,
அவ்வப்போது நமக்கே தெரியாமல் எப்படியோ கிழிந்த ரூபாய் நோட்டுகள் நம்மிடம் வந்து சேர்ந்துவிடும். அதை முறையாக எப்படி மாற்றுவது என்று பலருக்கும் தெரியாது. கிழிந்த நோட்டுகளை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் மாற்றிக்கொள்ளலாம். எவ்வளவு ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறோம் என்பதைப் பொறுத்து விதிமுறைகள் மாறுபடும்.
torn currency notes, rupees, damaged notes, RBI, Banks, Exchange currency notes, Reserve Bank of India,
அழுக்கான நோட்டுகள் அல்லது கிழிந்துபோய் ஒட்ட வைத்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும். வங்கிகளுக்குச் சென்று கவுண்டரில் சேதம் அடைந்த ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ரொக்கமாக மாற்றிக்கொள்ளலாம். பெரும்பாலான வங்கிகளில் ரூபாய் நோட்டை மாற்றும்போது பணத்தை ரொக்கமாகத் தரமாட்டார்கள். வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துவிடுவார்கள்.
torn currency notes, rupees, damaged notes, RBI, Banks, Exchange currency notes, Reserve Bank of India,
சிதைந்துபோன ரூபாய் நோட்டுகளையும் மாற்றிக்கொள்ளலாம். ஒரு ரூபாய் நோட்டு இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாகக் கிழிந்துபோய் அதில் ஒரு பகுதி இல்லாமல் இருந்தாலும் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
torn currency notes, rupees, damaged notes, RBI, Banks, Exchange currency notes, Reserve Bank of India,
இதுபோல ஒரு நாளில் 20 நோட்டுகள் அல்லது ரூ.5,000 வரை மதிப்புள்ள நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும். குறைவாகவே இருக்க வேண்டும். ரூ.5000 க்கு மேல் மாற்ற வேண்டும் என்றால் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். ஒருவேளை மாற்றவேண்டிய தொகை ரூ.50,000 க்கு மேல் இருந்தால் அடையாள சான்றும் கொடுக்க வேண்டியிருக்கலாம்.
torn currency notes, rupees, damaged notes, RBI, Banks, Exchange currency notes, Reserve Bank of India,
ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்து, கருகிய நிலையில் இருந்தாலோ, மிகவும் கசங்கிப் போயிருந்தாலோ அவற்றை வங்கிகள் வாங்கிக்கொண்டு, மாற்றிக்கொடுக்காது. ஆனால், அவற்றை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்ற முடியும். ரிசர்வ் வங்கி அந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு, ஆய்வு செய்து பார்த்துவிட்டு மாற்றிக் கொடுப்பார்கள்.
torn currency notes, rupees, damaged notes, RBI, Banks, Exchange currency notes, Reserve Bank of India,
மோசமான நிலையில் உள்ள நோட்டுகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தால் ரிசர்வ் வங்கியின் நான்-செஸ்ட் கிளைகளில் கூட கவுண்டரில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.