கர்ப்பிணிகளுக்கு ரூ.5,000 பணம்.. இந்த அரசு உதவி தெரியுமா? முழு விளக்கம் உள்ளே
மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டம், முதல் கர்ப்பத்திற்கு ரூ.5,000 மற்றும் இரண்டாவது பெண் குழந்தைக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள் பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000 அரசு உதவி
மத்திய அரசு செயல்படுத்தும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு நிதி ஆதரவு வழங்கும் முக்கிய திட்டமாகும். தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம். முதல் கர்ப்பத்திற்கு அரசு ரூ.5,000 வழங்குகிறது.
முதல் கர்ப்பத்திற்கு நேரடி நிதி
இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது. கர்ப்ப பதிவு செய்யும் போது ரூ.3,00 வழங்கப்படும். குழந்தை பிறந்த பின் பதிவு செய்ததும் ரூ.2,000 வழங்கப்படும். இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்தால் ரூ.6,000 உதவி வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைக்கு சலுகை
இந்த நிதி, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி அல்லது தபால் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு குறைவான குடும்பங்கள் இதற்கு தகுதியானவர்கள்.
தகுதி, ஆவணங்கள் முழு விவரம்
ஆன்லைன் வழியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அருகிலுள்ள அங்கன்வாடி மையம் அல்லது சுகாதார நிலையத்திலும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

