MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • உலகில் அதிகம் ட்ராக் செய்யப்பட்ட விமானம்.. சமூக ஊடகங்களில் வைரலான மோடி விமானம் - ஏன் தெரியுமா?

உலகில் அதிகம் ட்ராக் செய்யப்பட்ட விமானம்.. சமூக ஊடகங்களில் வைரலான மோடி விமானம் - ஏன் தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது Air India One விமானம், ஆயிரக்கணக்கானோரால் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு, அந்த நேரத்தில் உலகில் அதிகம் பார்க்கப்பட்ட விமானமாக மாறியது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 26 2026, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உலகில் அதிகம் ட்ராக் செய்யப்பட்ட விமானம்
Image Credit : Asianet News

உலகில் அதிகம் ட்ராக் செய்யப்பட்ட விமானம்

பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இஸ்ரேலுக்கு சென்றது உலகளவில் பெரிய கவனத்தை ஈர்த்தது. அவர் பயணம் செய்த விமானம் அந்த நேரத்தில் உலகில் அதிகம் நேரடியாகக் கண்காணிக்கப்பட்ட விமானமாக மாறியது. விமானங்களை கண்காணிக்கும் Flightradar24 தளத்தின் தரவின்படி, ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் அந்த விமானத்தின் பாதையை பின்தொடர்ந்தனர். இந்த அசாதாரண ஆர்வம், பயணத்தின் அரசியல் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

25
மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம்
Image Credit : Asianet News

மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம்

இந்த பயணத்தில் பயன்படுத்தப்பட்ட Air India One என்ற சிறப்பு விமானம், இந்திய அரசின் உயர்நிலை அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக Boeing 777-300ER மாடலை அடிப்படையாக கொண்ட இந்த விமானத்தில் பாதுகாப்பு அமைப்புகள், பாதுகாப்பான தொடர்பு வசதிகள் மற்றும் கட்டுப்பாட்டு மையம் போன்ற அம்சங்கள் உள்ளன.

Related Articles

Related image1
மோடி வந்த மாநாட்டில் இப்படியொரு சம்பவமா? அலறிய ஸ்டார்ட்-அப் ஓனர்.. 24 மணி நேரத்தில் நடந்த மேஜிக்!
Related image2
அமெரிக்க அதிபரையே மிஞ்சிய நம்ம பிரதமர்.. மோடி செய்த வரலாற்று சாதனை.. உலகமே வியக்குது
35
பாகிஸ்தான், ஈரான் வழி தவிர்த்த மோடி விமானம்
Image Credit : X

பாகிஸ்தான், ஈரான் வழி தவிர்த்த மோடி விமானம்

பிரதமரின் விமானம் பாகிஸ்தான் மற்றும் ஈரான் வான்வழியை தவிர்த்து, ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் வழியாக இஸ்ரேலுக்குச் சென்றது. புதுடெல்லி பாலம் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், குஜராத் மீது பறந்து அரேபிய கடலை கடந்தது. ஜோர்டான் வான்வழியில் நுழைந்தபோது சுமார் 9,000க்கும் மேற்பட்டோர் நேரடியாக அதை கண்காணித்ததாக தரவுகள் காட்டுகின்றன.

45
இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு
Image Credit : X

இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு

இது பிரதமர் மோடியின் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இஸ்ரேலுக்கான இரண்டாவது பயணம் ஆகும். 2017ஆம் ஆண்டு அவர் முதன்முறையாக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார். இந்த முறை இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகுவுடன் தனிப்பட்ட சந்திப்பு, அந்நாட்டு நாடாளுமன்ற உரை மற்றும் இந்திய வம்சாவளி மக்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

55
முக்கிய அத்தியாயம்
Image Credit : X

முக்கிய அத்தியாயம்

மேலும், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்த ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ஊடகங்களும் இந்த பயணத்தை சிறப்பாக வரவேற்றுள்ளன. உலக அரசியல் மேடையில் இந்த பயணம் முக்கிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதமர் மோடி
நரேந்திர மோடி
இந்தியா
வானூர்திப் பயணங்கள்
உலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பூமிக்கு வரும் ஏலியன்கள்? பாபா வங்காவின் கணிப்பு நிஜமாகிறதா! அதிர வைக்கும் தகவல்!
Recommended image2
நள்ளிரவில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக். பிரதமர்.. இம்ரான் கானின் நிலை..?
Recommended image3
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
Related Stories
Recommended image1
மோடி வந்த மாநாட்டில் இப்படியொரு சம்பவமா? அலறிய ஸ்டார்ட்-அப் ஓனர்.. 24 மணி நேரத்தில் நடந்த மேஜிக்!
Recommended image2
அமெரிக்க அதிபரையே மிஞ்சிய நம்ம பிரதமர்.. மோடி செய்த வரலாற்று சாதனை.. உலகமே வியக்குது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved