MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிடங்கள் தான்.. 5 மணி நேரம் மிச்சம்.. புல்லட் ரயில் அப்டேட்!

சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிடங்கள் தான்.. 5 மணி நேரம் மிச்சம்.. புல்லட் ரயில் அப்டேட்!

Bullet Train: சென்னை, பெங்களூரு இடையே புல்லட் ரயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் சென்னை டூ பெங்களூருவுக்கு வெறும் 73 நிமிடங்களில் சென்றடைய முடியும்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 21 2026, 06:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவில் புல்லட் ரயில்கள்
Image Credit : AI

இந்தியாவில் புல்லட் ரயில்கள்

நமது இந்தியாவில் ரயில் போக்குவரத்து உயிர்நாடியாக உள்ளது. நாடு முழுவதும் தினமும் பல லட்சக்கணக்கான பயணியில் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நமது நாட்டில் சாதாரண பயணிகள் ரயில் முதல் அதிவேக வந்தே பாரத் ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன.

 இதற்கிடையே நாட்டின் ரயில் கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் முக்கிய நகரங்கள் இடையே அதிவேக புல்லட் ரயில்களை (Bullet Train) இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை - அகமதாபாத் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில் (Chennai to Bengaluru Bullet Train)
Image Credit : Gemini AI

சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில் (Chennai to Bengaluru Bullet Train)

இந்த நிலையில், மும்பை - அகமதாபாத் போன்று சென்னை, பெங்களூரு இடையேயும் புல்லட் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குட்நியூஸ் சொல்லியுள்ளார். 

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சி மையத்தைத் திறந்து வைத்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், "நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை - அகமதாபாத் காரிடார் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இது அடுத்த ஆண்டு (2027) பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து, சென்னை - பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய வழித்தடங்களிலும் புல்லட் ரயில் சேவைகளை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என்று கூறினார்.

Related Articles

Related image1
ரயில் டிக்கெட்டின் இருபுறமும் இருக்கும் சிறிய துளைகள்.! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் தெரியுமா?
Related image2
ரயிலில் டிக்கெட் எடுக்காதவர்கள், லேடீஸ் கோச் ஆண்களுக்கு ஷாக்! ஜூலை 1 முதல் 5 மடங்கு அபராதம்!
35
வெறும் 73 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு
Image Credit : X

வெறும் 73 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வெறும் 73 நிமிடங்களில் அதாவது 1 மணி நேரம் 13 நிமிடங்களில் ரயிலில் சென்று விட முடியும். 

இப்போது சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் பெங்களூருவை சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்களில் சென்றடைகிறது. சதாப்தி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 30 நிமிடங்களிலும், டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் 5 மணி நேரம் 45 நிமிடங்களிலும் பெங்களூரு சென்றடைகிறது. மற்ற சூப்பர் பாஸ்ட் ரயில்களில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல குறைந்தது 6 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகிறது.

45
பயண நேரம் 5 மணி நேரம் மிச்சமாகும்
Image Credit : X

பயண நேரம் 5 மணி நேரம் மிச்சமாகும்

ஆனால் புல்லட் ரயில் செயல்பாட்டுக்கு வரும்போது நான் முன்பே கூறியபடி வெறும் 73 நிமிடங்களில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்றடைய முடியும். இதனால் 5 மணி நேரத்துக்கு மேலாக பயண நேரம் மிச்சமாகும் என்பதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை டூ பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ வேகத்திலும், சராசரியாக 320 கி.மீ வேகத்திலும் இயக்கப்பட ஏதுவாக தண்டவாளங்கள் அமைக்கப்படும்.

55
வழித்தடம் என்ன? பெங்களூரு நகரில் சுரங்கப்பாதை
Image Credit : X

வழித்தடம் என்ன? பெங்களூரு நகரில் சுரங்கப்பாதை

தேசிய அதிவேக ரயில் கழகம் (NHSRCL) தயாரித்து வரும் திட்ட அறிக்கையின்படி, இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் தொடங்கி பூந்தமல்லி, பரந்தூர் புதிய விமான நிலையம், சித்தூர், கோலார் வழியாக பெங்களூருவின் பையப்பனஹள்ளி மற்றும் ஒயிட்ஃபீல்டு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைய வாய்ப்புள்ளது. 

பெங்களூரு நகருக்குள் நுழையும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஒயிட்ஃபீல்டு முதல் பையப்பனஹள்ளி வரை சுமார் 12 கி.மீ தூரத்திற்கு நிலத்தடி சுரங்கப்பாதை வழியாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னை, பெங்களூரு மேலும் பொருளாதார வளர்ச்சியடையும்

இந்த புல்லட் ரயில் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரு நகரங்களும் வணிக ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் இன்னும் மேலும் வளர்ச்சி அடையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
புல்லட் ரயில்
சென்னை
பெங்களூரு
இந்திய இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Magalir Urimai Thogai Update: மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!
Recommended image2
ரயில் டிக்கெட்டின் இருபுறமும் இருக்கும் சிறிய துளைகள்.! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் தெரியுமா?
Recommended image3
Gold Vault: பனிமலையின் கீழ் 148 டன் தங்கம்... உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரகசிய பங்கரின் பின்னணி!
Related Stories
Recommended image1
ரயில் டிக்கெட்டின் இருபுறமும் இருக்கும் சிறிய துளைகள்.! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் தெரியுமா?
Recommended image2
ரயிலில் டிக்கெட் எடுக்காதவர்கள், லேடீஸ் கோச் ஆண்களுக்கு ஷாக்! ஜூலை 1 முதல் 5 மடங்கு அபராதம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved