MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயிலில் டோட்டலாக மாறிய ரூல்ஸ்.. இனி டிக்கெட் எடுக்காதவர்கள் நிலைமை சிக்கல் தான்!

ரயிலில் டோட்டலாக மாறிய ரூல்ஸ்.. இனி டிக்கெட் எடுக்காதவர்கள் நிலைமை சிக்கல் தான்!

Indian Railway Penalty Rules 2026: ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் இனி 500 ரூபாய் அபாரதம் விதிக்கபடும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் பெண்கள் பெட்டியில் பயணம் செய்யும் ஆண்களுக்கு அபாராத தொகை 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Jun 20 2026, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரயிலில் அபராத தொகை 5 மடங்கு உயர்வு
Image Credit : AI

ரயிலில் அபராத தொகை 5 மடங்கு உயர்வு

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கும், ரயில்வே விதிகளை மீறுபவர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் அதிரடி ஷாக் ஒன்று கொடுத்துள்ளது. அதாவது டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களின் அபராத தொகையை ரயில்வே துறை இரண்டு மடங்காக்கியுள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, ரயில்வே சட்டங்களில் இந்த பெரிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இனி ரூ.250 இல்லை; 500 ரூபாய் அபராதம்
Image Credit : our own

இனி ரூ.250 இல்லை; 500 ரூபாய் அபராதம்

மத்திய அரசின் புதிய 'ஜன விஸ்வாஸ் சட்டம் 2026' (Jan Vishwas Act) அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, இந்த புதிய அபராத விதிமுறைகள் வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. இதுவரை ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பிடிபடும் பயணிகளுக்கு குறைந்தபட்ச அபராதமாக 250 ரூபாய் விதிக்கப்பட்டு வந்தது (பயணித்த தூரத்திற்கான கட்டணத்துடன் சேர்த்து). ஆனால், வரும் ஜூலை 1 முதல் இந்த குறைந்தபட்ச அபராதம் 500 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, நீங்கள் பயணிக்கும் தூரத்திற்கான ரயில் கட்டணம் + ₹500 கூடுதல் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த அபராத தொகை இரண்டு மடங்கு ஆகியுள்ளது. டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களைக் குறைக்கவும், ரயில்வேயின் வருவாயைப் பெருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
Train: ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் 7 இலவச வசதிகள்! இனி காசு கொடுத்து ஏமாறாதீங்க!
Related image2
Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?
34
பெண்கள் பெட்டியில் ஆண்கள் ஏறினால் 2,500 ரூபாய் அபராதம்
Image Credit : our own

பெண்கள் பெட்டியில் ஆண்கள் ஏறினால் 2,500 ரூபாய் அபராதம்

புதிய சட்டத் திருத்தத்தின்படி, டிக்கெட் இல்லாத பயணம் மட்டுமின்றி பல்வேறு விதிமீறல்களுக்கான அபராதங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்த பட்டியலை கீழே பார்ப்போம்.

பெண்கள் பெட்டி விதிமீறல்: ரயில்களில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண்கள் பயணித்தால், இனி 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக ரயிலில் இருந்து இறக்கிவிடவும் ரயில்வே ஊழியர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இதற்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அபராத தொகை 5 மடங்கு அதிகமாகியுள்ளது.

போலி டிக்கெட்டில் பயணித்தால்: வேறொருவரின் பெயரில் உள்ள டிக்கெட்டைப் பயன்படுத்தி பயணித்தால், அந்த டிக்கெட் பறிமுதல் செய்யப்படுவதோடு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அனுமதியின்றி வியாபாரம்: ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதே தவறை மீண்டும் செய்தால் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு: ரயில் நிலையங்களிலோ அல்லது ரயிலின் உள்ளேயோ ஆபாசமாகப் பேசுவது அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

ஆபத்தான பொருட்கள்: ரயில்களில் தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் அல்லது ஆபத்தான பொருட்களை எடுத்துச் சென்றால் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

44
இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபராத கட்டணம் 10% உயர்வு
Image Credit : our own

இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபராத கட்டணம் 10% உயர்வு

ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் மற்றுமொரு ஷாக் செய்தியும் உள்ளது. அதாவது இந்த புதிய சட்டத்தின்படி, இனிவரும் காலங்களில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இந்த அபராதத் தொகைகள் தானாகவே 10% உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
இந்திய இரயில்வே
தொடர்வண்டி பயணச்சீட்டு
தொடர்வண்டி விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Train Delay Rules: ரயில் லேட்டா? இந்த 4 இலவச வசதிகள் உங்களுக்கும் கிடைக்கும் தெரியுமா?
Recommended image2
Govt Scheme: பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன? வழிமுறைகள் இதோ.!
Recommended image3
LPG பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு! 30 நாட்கள் விதி போய்... 90 நாள் ரூல் அமல்?
Related Stories
Recommended image1
Train: ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் 7 இலவச வசதிகள்! இனி காசு கொடுத்து ஏமாறாதீங்க!
Recommended image2
Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved