Train: ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் 7 இலவச வசதிகள்! இனி காசு கொடுத்து ஏமாறாதீங்க!
Train Passenger Free Amenities: இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் 7 இலவச சேவைகள் குறித்தும், இது குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் 7 இலவச வசதிகள்
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் தினமும் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான ரயில்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு பல்வேறு இலவச சேவைகள் கிடைக்கின்றன. இது குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. இதில் மிக முக்கியமான 7 இலவச சேவைகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
அவசர மருத்துவ உதவி (Medical Aid)
ரயிலில் பயணிக்கும் போது உங்களுக்கோ அல்லது சக பயணிகளுக்கோ திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால் பயப்படத் தேவையில்லை. உடனே ரயிலில் இருக்கும் டிடிஆர் (TTE) எனப்படும் டிக்கெட் பரிசோதகரிடம் விபரத்தைக் கூறலாம் அல்லது '139' என்ற ரயில்வே உதவி எண்ணை அழைக்கலாம். அடுத்ததாக வரும் ரயில் நிலையத்திலேயே உங்களுக்குத் தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் இலவசமாக செய்து தரப்படும்.
ரயில் நிலையங்களில் இலவச அதிவேக வைஃபை (Free Wi-Fi)
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இன்டர்நெட் என்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. நாட்டின் 6,000-க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் 'ரெயில்வயர்' (RailWire) மூலமாக இலவச வைஃபை வசதி வழங்கப்படுகிறது. நீங்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைந்ததும், உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு வரும் OTP-ஐப் பயன்படுத்தி, முதல் 30 நிமிடங்களுக்கு அதிவேக இணையச் சேவையை முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
சக்கர நாற்காலி (Wheelchair Facility)
நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் அல்லது முதியவர்கள் சிரமமின்றி ரயிலுக்குச் செல்ல, பெரிய ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி (Wheelchair) வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை நீங்கள் IRCTC இணையதளத்தில் 'Yatri Mitra' சேவை மூலமாக முன்கூட்டியே இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
முதியவர்களுக்கான பேட்டரி கார் வசதி (Battery Cars)
பெரிய ரயில் நிலையங்களில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்கு நீண்ட தூரம் நடக்க முடியாமல் தவிக்கும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காக பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான முக்கிய ரயில் நிலையங்களில் இந்த சேவை முற்றிலும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
ஏசி பெட்டிகளில் படுக்கை வசதிகள் (Free Bedding)
நீங்கள் ஏசி வகுப்புகளில் (1AC, 2AC, 3AC) பயணிப்பவராக இருந்தால், உங்களுக்கு வழங்கப்படும் பெட்ஷீட், கம்பளி, தலையணை மற்றும் சிறிய துண்டு ஆகியவற்றிற்கு தனியாக காசு செலுத்த வேண்டியதில்லை. சில நேரங்களில் ஊழியர்கள் இதைக் கொடுக்கத் தவறினால், நீங்கள் உரிமையோடு கேட்டுப் பெறலாம். (குறிப்பு: கரீப் ரத் போன்ற சில குறிப்பிட்ட ரயில்களில் இதற்குத் தனிக் கட்டணம் உண்டும் என்பது குறிப்பிடத்தக்கது)
தாய்மார்களுக்கான சிறப்பு அறைகள் (Baby Feeding Rooms)
சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பல முக்கிய ரயில் நிலையங்களில் பிரத்யேகப் பாலூட்டும் அறைகள் (Nursing Rooms) அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழல் கொண்ட இந்த அறைகளைத் தாய்மார்கள் எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
காத்திருப்பு அறைகள் (Waiting Halls)
ரயில் வருவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் தாமதமாகும் பட்சத்தில், நீங்கள் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள கடைகளில் அமர்ந்து காசை வீணடிக்கத் தேவையில்லை. உங்களிடம் முறையான ரயில் டிக்கெட் (Confirmed அல்லது RAC) இருந்தால், ரயில் நிலையங்களில் உள்ள பொது காத்திருப்பு அறைகளை (Waiting Halls) நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்குள்ள கழிவறை மற்றும் இருக்கை வசதிகள் அனைத்தும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

