MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • IRCTC: ரயில் ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசியில் பயணிக்கலாம்.. இந்த ரகசிய 'ட்ரிக்' உங்களுக்கு தெரியுமா?

IRCTC: ரயில் ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசியில் பயணிக்கலாம்.. இந்த ரகசிய 'ட்ரிக்' உங்களுக்கு தெரியுமா?

IRCTC: ரயில் ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசியில் பயணிக்கலாம். அதுவும் ஒரு பைசா கூட கூடுதல் கொடுக்க வேண்டாம். இந்த டிரிக் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Jun 08 2026, 04:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரயில் ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசியில் பயணிக்கலாம்
Image Credit : AI

ரயில் ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசியில் பயணிக்கலாம்

இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நாட்டில் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகியுள்ளது. நடுத்தர மக்கள் பெரும்பாலும் ஸ்லீப்பர் கிளாஸ் (Sleeper Class) டிக்கெட்டுகளையே தேர்வு செய்கிறார்கள்.

சில நேரங்களில் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட் புக் செய்தவர்கள் ஏசி பெட்டியிலும் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆமாம்.. உங்களிடம் சாதாரண ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட் மட்டுமே இருந்தாலும், நீங்கள் ஒரு ரூபாய் கூட கூடுதலாகச் செலவழிக்காமல் ஏசி பெட்டிக்கு மாற ஒரு ரகசிய வழி இருக்கிறது. IRCTC-யின் இந்த அதிகாரப்பூர்வ 'ட்ரிக்' பற்றி இந்த செய்தியில் விரிவாகப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அந்த ரகசிய ட்ரிக் இதுதான் (Auto Upgradation)
Image Credit : chat gpt

அந்த ரகசிய ட்ரிக் இதுதான் (Auto Upgradation)

இந்திய இரயில்வே (Indian Railways) பயணிகளின் வசதிக்காக 'ஆட்டோ அப்கிரேடேஷன்' (Auto Upgradation) என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் படி, நீங்கள் ஸ்லீப்பர் கிளாஸில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும், உங்களது டிக்கெட் தானாகவே ஏசி (3AC, 2AC) பெட்டிக்கு மாற்றப்படும்.

ஸ்லீப்பர் டிக்கெட் பயணிகளை ஏசி கோச்களுக்கு மாற்றுவது ஏன்?

ரயில்வேயில் சார்ட் (Chart) தயாரிக்கும் போது, சில நேரங்களில் ஏசி பெட்டிகளில் (AC Coaches) இடங்கள் காலியாக இருக்கும். அதே நேரத்தில், ஸ்லீப்பர் கிளாஸில் வெயிட்டிங் லிஸ்ட் (Waiting List) நீளமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஏசி பெட்டிகளின் காலியிடங்களை நிரப்பவும், ஸ்லீப்பர் கிளாஸ் வெயிட்டிங் லிஸ்ட்டைக் குறைக்கவும் இரயில்வே இந்த ஆட்டோ அப்கிரேடேஷன் முறையைப் பயன்படுத்துகிறது.

Related Articles

Related image1
Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!
Related image2
Now Playing
சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
35
இந்த வசதியைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
Image Credit : Getty

இந்த வசதியைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த வசதி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால், டிக்கெட் புக் செய்யும் போது ஒரு சிறிய விஷயத்தைக் கவனிக்க வேண்டும்:

ஆன்லைன் முன்பதிவு (IRCTC Web/App): நீங்கள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, 'Review Journey Details' பக்கத்தில் "Consider for Auto Upgradation" என்ற ஒரு செக்பாக்ஸ் (Checkbox) இருக்கும். அதை நீங்கள் டிக் செய்ய வேண்டும்.

கவுண்ட்டர் முன்பதிவு (Railway Counter): நீங்கள் ரயில் நிலையத்திற்குச் சென்று பார்ம் நிரப்பி டிக்கெட் வாங்குவதாக இருந்தால், அந்தப் படிவத்தில் ஆட்டோ அப்கிரேடேஷன் வேண்டுமா என்ற கேள்விக்கு 'Yes' என்று குறிப்பிட வேண்டும்.

இந்த வசதியைப் பெற நீங்கள் எந்தவிதமான கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஸ்லீப்பர் கட்டணத்திலேயே ஏசியில் பயணிக்கலாம்.

45
ஆட்டோ அப்கிரேடேஷன் நிபந்தனைகள்
Image Credit : social media

ஆட்டோ அப்கிரேடேஷன் நிபந்தனைகள்

இந்தத் திட்டம் முழுக்க முழுக்க கணினி மூலமாக (Automated System) சில விதிகளின் அடிப்படையில் மட்டுமே நடக்கும்.

* பொதுவாக கன்பார்ம் (Confirmed) டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு மட்டுமே இந்த அப்கிரேடு வாய்ப்பு முதலில் கிடைக்கும்.

முழு குடும்பத்திற்கும் மாற்றம்: ஒரே பிஎன்ஆர் (PNR) எண்ணில் 4 பேர் டிக்கெட் எடுத்திருந்தால், இடவசதியைப் பொறுத்து 4 பேருக்குமே அப்கிரேடு கிடைக்கும். ஒருவருக்கு மட்டும் கிடைத்து மற்றவர்கள் ஸ்லீப்பரில் பயணிக்கும் நிலை வராது.

பழைய இருக்கை ரத்தாகும்: உங்களுக்கு ஏசி பெட்டியில் இடம் கிடைத்துவிட்டால், உங்களது பழைய ஸ்லீப்பர் இருக்கை வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் அடுத்த பயணிக்கு ஒதுக்கப்பட்டுவிடும். எனவே, உங்களால் மீண்டும் பழைய இருக்கைக்குப் போக முடியாது.

55
உங்கள் டிக்கெட் அப்கிரேடு ஆகியுள்ளதா என எப்படி அறிவது?
Image Credit : Google

உங்கள் டிக்கெட் அப்கிரேடு ஆகியுள்ளதா என எப்படி அறிவது?

ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சார்ட் (Chart) தயாரிக்கப்படும் போது உங்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் புதிய சீட் எண் மற்றும் கோச் எண் (உதாரணமாக B1, B2) அனுப்பப்படும்.

இல்லையெனில் நீங்கள் ரயில் நிலையத்திற்கு செல்லும் முன் உங்களது PNR Status-ஐ ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம். அதில் உங்களது தற்போதைய கோச் மற்றும் சீட் விவரங்கள் மாறியிருப்பது தெரியவரும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
ரயில் டிக்கெட் முன்பதிவு
தொடர்வண்டி விதிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ATM Closure: நாடு முழுவதும் கொத்து கொத்தாக இழுத்து மூடப்படும் ATM மையங்கள்? அதிர்ச்சியில் சாமானியர்கள்
Recommended image2
Business: மாதம் அசால்டா சம்பாதிக்கலாம் ரூ. 60 ஆயிரம்.! இந்த டாப் 5 தொழில்களை தொடங்குனா போதும்.!
Recommended image3
Cashew: ஒரு கிலோ முந்திரி வெறும் 50 ரூபாய் தான்.! இந்த கிராமத்துக்கு போனா மூட்டை மூட்டையா வாங்கலாம்.!
Related Stories
Recommended image1
Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!
Recommended image2
Now Playing
சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved