MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Indian Railways Child Ticket: 5 வயது வரை ரயிலில் டிக்கெட் தேவையில்லையா? பெற்றோருக்கே தெரியாத ரயில்வே விதி

Indian Railways Child Ticket: 5 வயது வரை ரயிலில் டிக்கெட் தேவையில்லையா? பெற்றோருக்கே தெரியாத ரயில்வே விதி

Indian Railways Child Ticket: 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரயிலில் டிக்கெட் தேவையில்லையா? 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு அரை கட்டணமா அல்லது முழு கட்டணமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகளை தெரிந்துகொள்வது தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 21 2026, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் விதிகள்
Image Credit : our own

குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் விதிகள்

குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்யும்போது பெரியவர்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்வது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் சிறிய குழந்தைகளுக்கு எந்த வயது வரை டிக்கெட் தேவையில்லை, எப்போது அரை கட்டணம் செலுத்த வேண்டும், எப்போது முழு கட்டணம் கட்ட வேண்டும் என்பது பலருக்கும் குழப்பம் உள்ளது. குறிப்பாக 3 அல்லது 4 வயது குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோர் இந்த விதிகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
5 வயது குழந்தைக்கு ரயில் டிக்கெட்
Image Credit : our own

5 வயது குழந்தைக்கு ரயில் டிக்கெட்

இந்திய ரயில்வே விதிகளின்படி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனியாக டிக்கெட் வாங்க தேவையில்லை. அவர்கள் பெற்றோருடன் இலவசமாக பயணம் செய்யலாம். இருப்பினும், அவர்களுக்கு தனி இருக்கை அல்லது படுக்கை ஒதுக்கப்படாது. குழந்தைக்கு தனி இருக்க வேண்டும் என்றால், முன்பதிவு செய்யும் போதே அந்த வசதியைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அந்த இருக்கைக்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

WhatsApp Rs 79: இனி வாட்ஸ்அப்புக்கும் மாத கட்டணம்.. ரூ.79 செலுத்தினால் கிடைக்கும் புதிய வசதிகள் என்ன?

Related Articles

Related image1
Sleeper Coach: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் ஸ்லீப்பர் கோச்சில் செல்லலாமா? ரயில்வே விளக்கம்
Related image2
ரயிலில் சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிடங்களில் போகலாம்! மத்திய அரசின் செம அப்டேட்!
35
5 முதல் 12 வயது வரை
Image Credit : our own

5 முதல் 12 வயது வரை

5 முதல் 12 வயதுக்குள் உள்ள இந்திய ரயில்வே இரண்டு வகையான முன்பதிவு வசதிகளை வழங்குகிறது. குழந்தை பெற்றோருடன் ஒரே பயணத்தில் பயணம் செய்தால், முன்பதிவின்போது தனி இருக்க வேண்டாம் என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம். ஆனால் குழந்தைக்கு தனி இருக்கை அல்லது படுக்கை உறுதி செய்ய வேண்டும், பெரியவர்களுக்கு விதிக்கப்படும் முழு கட்டணத்தையே செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணங்களில் இந்த தேர்வு பல குடும்பங்களுக்கு வசதியாக இருக்கும்.

45
மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டியது
Image Credit : our own

மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டியது

குழந்தையின் வயது தொடர்பான பயணத்தின் போது சந்தேகம் எழாமல், பிறப்புச் சான்றிதழ் அல்லது வயது குறிப்பிடப்பட்ட அரசின் அடையாள ஆவணத்தை எடுத்துச் செல்வது நல்லது. டிக்கெட் பரிசோதகர் கேட்கும் சூழலில் இது உதவியாக இருக்கும். குறிப்பாக திருவிழா மற்றும் விடுமுறை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், முன்பதிவு செய்யும் போது சரியான வயது விவரங்களை பதிவு செய்வது பயணத்தை சிரமமின்றி நிறைவு செய்ய உதவும்.

55
இந்திய ரயில்வே டிக்கெட் விதிகள்
Image Credit : our own

இந்திய ரயில்வே டிக்கெட் விதிகள்

ரயில்வே விதிகளை முன்கூட்டியே அறிந்திருப்பது தேவையற்ற அபராதம் அல்லது குழப்பத்தைத் தவிர்க்கும். குழந்தையின் வயதுக்கு ஏற்ப சரியான டிக்கெட்டை தேர்வு செய்து, தேவையான பயணம் செய்தால் குடும்பப் பயணம் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் அமையும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொடர்வண்டி பயணச்சீட்டு
இந்திய இரயில்வே
தொடர்வண்டிப் போக்குவரத்து
ரயில்
குழந்தைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Elon Musk: சம்பளம் மட்டும் இல்லை... ஷேரும் தர்றாரு! உலகையே ஆச்சரியப்பட வைத்த எலான் மஸ்க்! வேலை இருந்தா சொல்லுங்கப்பா..!
Recommended image2
449-க்கு 4 சிம், 75GB டேட்டா, Hotstar, Gemini Pro இலவசம்... ஜியோவின் இந்த ஆஃபர் செம ட்ரெண்டிங்!
Recommended image3
Daily Savings: தினமும் ₹50 சேமித்தாலே ₹35 லட்சமா? போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்!
Related Stories
Recommended image1
Sleeper Coach: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் ஸ்லீப்பர் கோச்சில் செல்லலாமா? ரயில்வே விளக்கம்
Recommended image2
ரயிலில் சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிடங்களில் போகலாம்! மத்திய அரசின் செம அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved