- Home
- Business
- Sleeper Coach: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் ஸ்லீப்பர் கோச்சில் செல்லலாமா? ரயில்வே விளக்கம்
Sleeper Coach: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் ஸ்லீப்பர் கோச்சில் செல்லலாமா? ரயில்வே விளக்கம்
Sleeper Coach: ஜெனரல் டிக்கெட் அல்லது வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச்சுகளில் பயணித்தால் என்ன நடக்கும்? அபராதம் விதிக்கப்படுமா? இதுதொடர்பான ரயில்வே விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

ஜெனரல் டிக்கெட் இருந்தால் எல்லா கோச்சிலும் செல்ல முடியுமா?
அவசர தேவையால் பலர் கடைசி நேரத்தில் ரயில் பயணத்தைத் திட்டமிடுவார்கள். ஆனால், கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்காத சூழலில் ஜெனரல் டிக்கெட் எடுத்துக்கொண்டு நேரடியாக ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்சுகளில் ஏறுவது அதிகரித்து வருகிறது. இது ஒரு சாதாரண விதிமீறல் அல்ல என இந்திய ரயில்வே மீண்டும் எச்சரித்துள்ளது.
ரயில்வே விதி என்ன சொல்கிறது?
ரயில்வே விதிகளின்படி, ஜெனரல் டிக்கெட் என்பது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. ஸ்லீப்பர் அல்லது ஈசி கோச்சுகளில் பயணிக்க தனிப்பட்ட முன்பதிவு அவசியம். காலியிடங்கள் இருந்தால், டிடிஇயிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட்டை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கும் அதே கட்டுப்பாடு
வெயிட்டிங் லிஸ்டில் உள்ள டிக்கெட் வைத்திருப்பவர்கள் கூட ரிசர்வ் செய்யப்பட்ட கோச்சுகளில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். பலர் இதை அறியாமல் விதிகளை மீறுகின்றனர். ஆனால், பரிசோதனையின் போது டிடிஇ நடவடிக்கை எடுப்பது உறுதி.
அபராதம் எவ்வளவு?
ஸ்லீப்பர் கோச்சில் ஜெனரல் டிக்கெட்டுடன் பிடிபட்டால் குறைந்தபட்சம் ரூ.250 அபராதம் விதிக்கப்படலாம். ஏசி கோச்சில் இதே தவறு செய்தால், அபராதம் ரூ.440 வரை உயரக்கூடும். சில நேரங்களில் அடுத்த இடத்தில் ஜெனரல் கோச்சுக்கு மாறும்படியும் உத்தரவிடப்படலாம்.
பயணத்திற்கு முன் விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்
ஒரு சிறிய அலட்சியம் தேவையற்ற அபராதத்தையும், பயண சிரமத்தையும் ஏற்படுத்தலாம். எனவே, ரயில் பயணத்திற்கு முன் டிக்கெட்டின் நிலை மற்றும் அதற்கான விதிகளை உறுதிப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

