இப்படி ஒரு சக்தியை அனுபவித்ததில்லை! ரஜினியை போல் பாபாஜி குகையில் தியானம் செய்த தமிழ் நடிகையின் பதிவு!
பிரபல இளம் நடிகையான ஆத்மிகா, இமயமலைக்கு சென்று பாபாஜி குகையில் தியானம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரபல இளம் நடிகையான ஆத்மிகா, இமயமலைக்கு சென்று பாபாஜி குகையில் தியானம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
திருப்பதி, சபரிமலை, இமயமலையில் உள்ள பாபாஜி குகை போன்ற குறிப்பிட்ட இடங்களுக்கும், கோவில்களுக்கும் கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே வரமுடியும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
Jawan: போட்ரா வெடிய... ஷாருக்கானை சாதனை கானாக மாற்றிய அட்லீ! 19 நாளில் 1000 கோடியை கடந்த ஜவான்!
தென்னிதியா மற்றும் வடஇந்தியாவில் உள்ள திருத் தளங்களுக்கு சென்று வந்தாலும்... இமயமலையில் உள்ள பாபாஜி குகை போன்றவற்றிக்கு செல்வது சற்று கடினமே.
அதிக தூரம் நடக்க வேண்டும் என்பதாலும், குளிர் அதிகமாக இருப்பதால்... வயதானவர்கள் பலர் அங்கு செல்வதற்கு யோசிப்பது உண்டு. இந்நிலையில் பிரபல நடிகை ஆத்மிகா இமயமலைக்கு சென்றபோது, எடுத்துக்கொண்ட, வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "இந்த பயணம் ஆன்மாவின் அழைப்பு என்பதை நான் உணர்ந்தேன். ஒரு தெய்வீக அழைப்பு எனக்கு வந்தது, எதை பற்றியும் சிறிதும் யோசிக்காமல் கிளம்பி சென்றேன். இது ஒரு கஷ்டமான பயணமாகவும், மரண பயத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தாலும், உன்னதமான அனுபவங்கள் எளிதில் கிடைத்து விடுவது இல்லை.
நான் பாபாஜி குகையில், தியானத்தில் அமர்ந்த போது... அந்த தியானம் ஆழமானதாக ஆரம்பிக்கப்பட்டது. என் வாழ்நாளில் இதற்கு முன் இதுபோன்ற சக்தியை நான் உணர்ந்தது இல்லை.
கதிர் - ஞானத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..! வசமாக சிக்கும் நந்தினி.. சுயரூபத்தை காட்டிய விசாலாட்சி!
இந்த தியானத்திற்கு பின் எனது முழு பார்வையும் மாறியது போல் உணர்தேன். நிபந்தனை இன்றி அவரை நான் குருவாக ஏற்றுக் கொண்டேன். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அவர்கள் எங்கிருந்தாலும் தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது, பாபாஜி குகைக்கு வந்து தியானம் செய்து அதன் அனுபவத்தை அனுபவிக்க வேண்டும் என ஆத்மிகா மிகவும் உணர்வு பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, சுமார் 4 வருடங்களுக்கு பின்னர்... தன்னுடைய நண்பர்களுடன் இமையலைக்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தை தொடர்ந்து தற்போது நடிகை ஆத்மிகவும், இந்த புனித யாத்திரையை நிறைவு செய்துள்ளார். ஆத்மிகா, நடிகரும் - இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக, 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து, ’கோடியில் ஒருவன்’ ’காட்டேரி’ ’கண்ணை நம்பாதே’ ’திருவின் குரல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகை சேர்ந்த இளம் நடிகைகள் பலர், மாலத்தீவு, பாலி போன்ற நாடுகளுக்கு செல்லும் நிலையில், ஆத்மிகாவின் ஆன்மீக பயணம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.