திருமணமாகி பல மாதம் ஆகியும் ஹனி மூன் மூடில் வெளிநாடு பறந்த கவுதம் - மஞ்சிமா ஜோடி! வைரலாகும் போட்டோஸ்!
இளம் நட்சத்திர ஜோடியான மஞ்சிமா மோகன் மற்றும் கவுதம் கார்த்தி ஜோடி, தங்களின் ஹனி மூன் கொண்டாட, ஈரோப் நாட்டுக்கு பறந்துள்ளனர் இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
Young Hero Gautham
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரும், பழம்பெரும் நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம் கார்த்திக், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து கரம்பிடித்தார்.
Gautham and Manjima Marriage
கவுதம் கார்த்திக், மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தன்னுடைய பணத்தின் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, முடிவு செய்து மிகவும் எளிமையான முறையிலேயே இவர்களின் திருமணம் நடந்தது.
பிரபலங்கள் கலந்து கொண்ட இயக்குனர் - நடிகர் விக்னேஷ் கார்த்தியின் வெட்டிங் ரிசெப்ஷன் போட்டோஸ்!
Busy in Shooting
குறிப்பாக குறிப்பிட்ட பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவருமே... படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால், ஹனி மூன் கூட கொஞ்சம் தாமதமாகவே சென்றனர்.
Manjima Fitness
திருமணத்திற்கு பின்னர் மஞ்சிமா மோகன் திரையுலகில் இருந்து விலகினாலும், உடல் எடையை குறைக்க தீவிர உடல்பயிற்சி செய்து வருகிறார். இதுகுறித்த வீடியோக்களை மஞ்சிமா அவ்வப்போது வெளியிட வைரலாகி வருகிறது.
கதிர் - ஞானத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..! வசமாக சிக்கும் நந்தினி.. சுயரூபத்தை காட்டிய விசாலாட்சி!
Gautham and Manjima Honey moon Mood:
திருமணம் ஆகி பல மாதங்கள் ஆனாலும், இந்த இளம் ஜோடி ஹனி மூன் மூடில் உள்ளனர். தற்போது இவர்கள் ஈரோப் நாட்டில் Budapest, Hungary என்கிற இடத்திற்கு சென்றுள்ளனர்.
Romamtic photos
அங்கு இருவரும் ரொமான்டிக் பறவைகளாக மாறி, எடுத்து கொண்ட போட்டோஸ்... சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கவுதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளியான ஆகஸ்ட் 16 1947 திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற நிலையில், தற்போது கிரிமினல் என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay Antony : மகள் இறந்த 6 நாட்களில்... படப்பிடிப்பில் கலந்து கொண்டாரா விஜய் ஆண்டனி! என்ன காரணம்?
மஞ்சிமா மோகன் மற்றும் கவுதம் கார்த்திக் இருவரும் ஹனி மூன் மூடில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது