Vijay Antony : மகள் இறந்த 6 நாட்களில்... படப்பிடிப்பில் கலந்து கொண்டாரா விஜய் ஆண்டனி! என்ன காரணம்?
நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய மகள் மீரா உயிரிழந்த 6 நாட்களில், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
Vijay Antony movies:
இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். இவரின் படங்களுக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் விஜய் ஆண்டனி இயக்கி - நடித்து வெளியான 'பிச்சைக்காரன் 2' திரைப்படம், பிரமாண்ட வெற்றிபெற்றது.
Vijay Antony Daughter Death:
இந்த படத்தின் வெற்றி மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக மட்டும் இன்றி, இயக்குனராகவும் அடையாள படுத்தி கொண்டார் விஜய் ஆண்டனி. மேலும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, திரைத்துறையில் தன்னுடைய அடுத்தடுத்த, வெற்றிகளை பதிவு செய்து வந்த விஜய் ஆண்டனி வாழ்க்கையில்... யாராலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக மாறியது அவரின் 16 வயது மகள், மீராவின் மரணம்.
Meera Suicide:
கடந்த ஒரு வருடமாகவே மன அழுத்தத்திற்காக மீரா சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், செப்டம்பர் 19-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் கோலிவுட் திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது. பல பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் விஜய் ஆண்டனி மகள் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
Vijay antony Statement
மகளின் மறைவுக்கு பின்னர், மிகவும் உருக்கமான வார்த்தைகளால் அறிக்கை ஒன்றை விஜய் ஆண்டனி வெளியிட்டார். அதில், "அன்பு நெஞ்சங்களே.. என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என்று எழுதி தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அல்ட்ரா மாடர்ன் உடையில்.. படுக்கையறை முதல்.. பாத் டப் வரை! கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
Vijay antony participate shooting:
தன்னுடைய மகளின் இழப்பில் இருந்து வெளியே வர முடியாமல் விஜய் ஆண்டனி குடும்பமே தற்போது சோகத்தில் உறைந்துள்ள நிலையில், தற்போது விஜய் ஆண்டனி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Behind the Reason of Shooting:
அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் மற்றும், படப்பிடிப்புக்கான அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாலும், தன்னால் தயாரிப்பாளர் நஷ்டத்தை சந்திக்கக்கூடாது என்கிற காரணத்தாலும், விஜய் ஆண்டனி சோகத்தை மறைத்து கொண்டு, பெங்களூருவில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.