பிரபலங்கள் கலந்து கொண்ட இயக்குனர் - நடிகர் விக்னேஷ் கார்த்தியின் வெட்டிங் ரிசெப்ஷன் போட்டோஸ்!
நடிகர், இயக்குனர், தொகுப்பாளர் என பன்முக திறமையோடு விளங்கும் விக்னேஷ் கார்த்தியின் வெட்டிங் ரிசெப்ஷன் போட்டோஸ்.
Vignesh Karthick Vijay tv Entry:
கடந்த 2010 ஆம் ஆண்டு, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பிரபலமானவர் விக்னேஷ் கார்த்திக். இதை தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட, கிங் ஆப் காமெடி சீசன் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
VJ and RJ Vignesh Karthik
இதை தொடர்ந்து சன் டிவி -யில் ஒளிபரப்பான சூரிய வணக்கம் நிகழ்ச்சியில், 'விருந்தினர் பக்கம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கினார். பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டும் இன்றி, 2016 ஆம் ஆண்டு பிக் FM நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் மாறினார்.
மோசமான சைக்கோ பேத்..! நெஞ்சை பதற வைக்கும் நயன்தாராவின் 'இறைவன்' பட 'ஸ்னீக் பீக்' !
Acting Movies:
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து 2016 ஆம் ஆண்டு, வெள்ளித்திரையில்... 'நட்பதிகாரம் 79 படத்தில், குணச்சித்திர நடிகராக அறிமுகமானார். பின்னர் சோலா பூரி, குற்றம் நடந்தது என்ன, போன்ற படங்களில் நடித்தார்.
Directing Movies:
பின்னர் அதிரடியாக 2018-ஆம் ஆண்டு வெளியான 'ஏன்டா தலையில எண்ண வெக்கல' படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம், வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. இதை தொடந்து, திட்டம் இரண்டு, அடியே போன்ற படங்களை இயக்கினார்.
Vijay Antony : மகள் இறந்த 6 நாட்களில்... படப்பிடிப்பில் கலந்து கொண்டாரா விஜய் ஆண்டனி! என்ன காரணம்?
Marriage:
சமீபத்தில் வெளியான அடியே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் வெற்றி பட இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட விக்னேஷ் கார்த்திக்கிற்கு, நேற்று திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவரது வெட்டிங் ரிசப்ஷன் போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.
Vijay tv Celebrities participate in marriage:
இதில் விஜய் டிவி பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
அல்ட்ரா மாடர்ன் உடையில்.. படுக்கையறை முதல்.. பாத் டப் வரை! கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!