வாய பொத்திட்டு இருக்கனும்; இனி இளையராஜாவை பத்தி பேசுனா அவ்வளவுதான்- வைரமுத்துக்கு வார்னிங் கொடுத்த கங்கை அமரன்
இளையராஜாவை பற்றி பேசினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என வைரமுத்துவுக்கு கங்கை அமரன் வார்னிங் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Vairamuthu, gangai amaran
இசைஞானி இளையராஜா பாடலுக்கு முழு உரிமையும் இசையமைப்பாளருக்கு தான் என வழக்கு ஒன்றில் வாதிட்ட சம்பவம் சமீபத்தில் பேசு பொருள் ஆனது. இந்த விவகாரம் குறித்து படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது பேசிய வைரமுத்து, பாடலுக்கு இசை எவ்வளவு பெரியதோ வரிகளும் அவ்வளவு பெரியது இதை புரிந்தவன் ஞானி; புரியாதவன் அஞ்ஞானி என இளையராஜாவை மறைமுகமாக தாக்கி பேசினார்.
gangai amaran, Ilaiyaraaja
இந்த நிலையில், வைரமுத்துவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் பேசியதாவது : “வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் நல்ல மனுஷன் கிடையாது. நல்ல புத்தியும் கிடையாது. இளையராஜாவை குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே பேட்டிகளை கொடுப்பது சரியல்ல. அவரை அடக்கிவைக்க ஆள் இல்லாததால் துள்ளிக்கொண்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Aijith Kumar : கோலிவுட் உலகின் Self Made ஹீரோ.. AKயின் வியக்க வைக்கும் டாப் 10 கார் மற்றும் பைக் கலெக்ஷன்!
gangai amaran
என்னைப் பொருத்தவரை இசை என்பது பூமி மாதிரி. தன்னைத் தானே புகழ்ந்து பேசக்கூடிய கவிஞர் வைரமுத்து தான். எந்தெந்த நேரத்துல எங்கெங்க போய் ஜால்ரா அடிக்கணுமோ, அங்கெல்லாம் அடித்து நல்ல வசதியாக இருக்கிறார் வைரமுத்து. அவருடைய மகன்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இனிமேல் இளையராஜாவை பற்றி குற்றம் குறைகளை சொல்லிக்கொண்டு மரியாதை இல்லாம பேசினால் அதற்கான விளைவுகளை வேறமாரி சந்திக்க நேரிடும்.
Ilaiyaraaja, vairamuthu
உங்கள் பேச்சை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இளையராஜாவை பத்தி பேசாம வாயை பொத்திக்கிட்டு இருக்கனும் என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார் கங்கை அமரன். வைரமுத்து - இளையராஜா இடையே பல வருடங்களாக மோதல் நீடித்து வந்தாலும், சமீப காலமாக மேடைகளில் இருவரும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வரும் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய விதமாக தற்போது கங்கை அமரனின் பேட்டி அமைந்திருக்கிறது. இதற்கு வைரமுத்து பதிலடி கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... எந்த நடிகையும் செய்யாத புது முயற்சி! 45 வயதில் எவரெஸ்ட் சிகரத்திற்கு ட்ரெக்கிங் சென்ற ஜோ.. குவியும் பாராட்டு!