Asianet News TamilAsianet News Tamil

தோனி இன்னும் விளையாடினால் நன்றாக இருக்கும் என நினைப்பது போல்... மோடியும் மீண்டும் பிரதமராகனும்- அண்ணாமலை

காங்கிரசும், திமுகவும்  மக்களை மொழிவாரியாக, இனவாரியாக வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை,  ஆனால் மோடி 10 ஆண்டுகள் அதனை மாற்றி இருக்கிறார் அனைவரையும் ஒற்றுமைபடுத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

Annamalai accused the Congress party and DMK of dividing the people KAK
Author
First Published May 20, 2024, 7:26 AM IST | Last Updated May 20, 2024, 7:26 AM IST

காங்., ஆம் ஆத்மி தவறான கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் தமிழ் மக்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த போது,  புதுடெல்லி கடந்த 150 ஆண்டுகளாக இருக்கும் தமிழர்கள் தங்களது கடின உழைப்பால் முன்னேறி வருகின்றனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை பிரதமர் ஆக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  டெல்லியில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் என தவறான கூட்டணி ஒன்று உள்ளது. இந்தியா கூட்டணி ஒற்றுமையோடு இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் பஞ்சாபிலும், மேற்குவங்காளம், கேரளாவில் தனித்தனியாக களம் காண்கிறார்கள்.

தோனி அடிச்ச சிக்ஸ் மைதானத்தை விட்டு வெளியில் போனது – நியூ பந்தால் ஆர்சிபி வெற்றி பெற்றது – தினேஷ் கார்த்திக்!

மக்களை பிளவுப்படுத்தியுள்ளது

நரேந்திர மோடி தமிழர்களின் செங்கோலை நாடாளுமன்றத்தின் வைத்து இருக்கிறார்.  இது தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை. காங்கிரசும், திமுகவும்  மக்களை மொழிவாரியாக, இனவாரியாக, உணவு வகையாக பிரித்து வைத்துள்ளது. ஆனால் மோடி பத்து ஆண்டுகள் அதனை மாற்றி இருக்கிறார் அனைவரையும் ஒற்றுமைபடுத்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒரு மாநிலங்களவை எம்பி க்கு நியாயம் கிடைக்க செய்யாமல் செய்யும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவலால் எப்படி ஏழை எளிய மக்களுக்கு நியாயத்தை செய்வார் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, டெல்லி தமிழ் மக்கள் மோடியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தோனியும் மோடியும்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி இன்னும் ஒரு ஆண்டு தனது 43வயதிலும் விளையாடினால் நன்றாக இருக்கம் என்று நினைப்பது போலர மோடியை பொறுத்தவரை 75 வயதுக்கு பிறகும் அவர்தான் பிரதமர் வரவேண்டும். 2029ஆம் ஆண்டிலும் அவர்தான் பிரதமராக வரவேண்டும் என அண்ணாமலை விருப்பம் தெரிவித்தார்.

5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது... எத்தனை தொகுதி.? நட்சத்திர வேட்பாளர்கள் யார் தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios