MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மழையால் போட்டி ரத்து – ஏமாற்றத்தோடு 3ஆவது இடம் பிடித்த RR – எலிமினேட்டர் போட்டியில் பலப்பரீட்சை!

மழையால் போட்டி ரத்து – ஏமாற்றத்தோடு 3ஆவது இடம் பிடித்த RR – எலிமினேட்டர் போட்டியில் பலப்பரீட்சை!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டியானது மழையின் காரணமாக டாஸ் போடப்பட்ட நிலையில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 19 2024, 11:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Rajasthan Royals vs Kolkata Knight Riders, 70th Match

Rajasthan Royals vs Kolkata Knight Riders, 70th Match

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Rajasthan Royals vs Kolkata Knight Riders, 70th Match

Rajasthan Royals vs Kolkata Knight Riders, 70th Match

இன்று கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடைபெற இருந்தது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் 2ஆவது இடம் பிடித்து முதல் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு தகுதி பெறும்.

37
Rajasthan Royals vs Kolkata Knight Riders, 70th Match

Rajasthan Royals vs Kolkata Knight Riders, 70th Match

அப்படியில்லை என்றால் 3ஆவது இடம் பிடித்து எலிமினேட்டர் சுற்று போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், கவுகாத்தியில் இரவு 7 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், போட்டியானது நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. ஒருவழியாக மழை நின்று டாஸூம் போடப்பட்டது. மேலும், 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

47
Rajasthan Royals vs Kolkata Knight Riders, 70th Match

Rajasthan Royals vs Kolkata Knight Riders, 70th Match

ஆனால், அதற்குள்ளாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கிய நிலையில், போட்டியானது டாஸ் போடப்பட்டதோடு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

57
RR vs KKR, Guwahati Match

RR vs KKR, Guwahati Match

இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 புள்ளிகள் பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் 17 புள்ளிகள் பெற்றது. எனினும், நெட் ரன்ரேட் அடிப்படையில் பின் தங்கியிருந்த நிலையில், 3ஆவது இடம் பிடித்தது. இதன் மூலமாக முதல் தகுதிச் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி வரும் 21 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

67
RR vs KKR Match Called Off

RR vs KKR Match Called Off

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் மோதும். இதே போன்று 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் எலிமினேட்டர் சுற்று போட்டியில் மோதுகின்றன.

77
Rajasthan Royals vs Kolkata Knight Riders, 70th Match

Rajasthan Royals vs Kolkata Knight Riders, 70th Match

இந்தப் போட்டி 22ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி 2ஆவது தகுதி சுற்று போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் மோதும். 26 ஆம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
RR vs KKR
RR vs RCB
சஞ்சு சாம்சன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved