Malavika Mohanan : தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை தான் மாளவிகா மோகனன். தனது ரசிகர்களுடன் இணைந்திருக்க, தனது எக்ஸ் பக்கத்தில் #AskMalavika என்ற தலைப்பில் அவர்களோடு உரையாடினார்.

கேரளாவில் பையனூரில் பிறந்த நடிகை மாளவிகா மோகனன், மலையாள திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய ஒளிப்பதிவாளர் மோகனன் அவர்களின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கிய மாளவிகா, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். 

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் திரை உலகில் பயணித்து வரும் மாளவிகா, தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பேட்ட" என்கின்ற திரைப்படத்தில் பூங்கொடி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ச்சியாக தமிழில் மாஸ்டர் மற்றும் மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். 

Vaadivaasal : வாடிவாசல் வருமா? வராதா? மெளனம் காக்கும் சூர்யா... மனம்திறந்த வெற்றிமாறன்

தற்பொழுது பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் விக்ரமின் "தங்கலான்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் உருவாகும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த சூழலில் #AskMalavika என்கின்ற தலைப்பில் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் தன் ரசிகர்களோடு அவர் உரையாடிக் கொண்டிருந்தார். 

அப்பொழுது ரசிகர் ஒருவர் "எப்பொழுது நீங்கள் கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டு, நடிக்க போகிறீர்கள்" என்று சர்ச்சையான கேள்வி ஒன்றை முன் வைத்திருந்தார். அதற்கு "நான் நிறுத்த மாட்டேன், அதில் உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் இருக்கிறதா? என்று மீண்டும் கேள்வி எழுப்பி அவரை வாயடைக்க செய்துள்ளார்.

Scroll to load tweet…

அதேபோல மற்றொரு இணையவாசி "அக்கா எப்போ ஆக்டிங் கிளாஸ் போக போறீங்க"? என்று கிண்டலாக கேள்வி கேட்க, "நீங்களும் ஏதோ ஒரு வகையில் எனக்கு பொருத்தமான நபராக மாறி, இந்த கேள்வியை கேட்கும் பொழுது நான் நடிப்பு பள்ளிக்கு செல்வேன்" என்று பதில் அளித்துள்ளார். அதே நேரத்தில் ரசிகர்களின் அன்பான பல கேள்விகளுக்கும் மாளவிகா ஜாலியாக பதில் அளித்துள்ளார். 

Scroll to load tweet…

Aijith Kumar : கோலிவுட் உலகின் Self Made ஹீரோ.. AKயின் வியக்க வைக்கும் டாப் 10 கார் மற்றும் பைக் கலெக்ஷன்!