கவர்ச்சி காத்துல கழண்டுவிழும் சேலையோடு... கிளாமர் தூக்கலா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷின் கிக்கான போட்டோஸ் இதோ
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், சேலையில் செம்ம கிளாமராக நடத்தி உள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
keerthy suresh
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம், தனுஷ் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கீர்த்தி, தெலுங்கிலும் சிரஞ்சீவி, நானி, மகேஷ் பாபு ஆகியோருடன் நடித்து டாப் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.
keerthy suresh photos
கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், தசரா மற்றும் மாமன்னன் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் படங்களில் ஹீரோயினாக நடித்து இந்த ஆண்டு தரமான கம்பேக் கொடுத்தார். இதையடுத்து போலா ஷங்கர் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படம் கடந்த மாதம் வெளியாகி தோல்வி அடைந்தது.
இதையும் படியுங்கள்... சசிகலா மிரட்டலுக்கு பயந்து தான் விஜய் அந்த படத்தில் நடித்தாரா! 20 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ஷாக்கிங் சீக்ரெட்
keerthy suresh photoshoot
இருப்பினும் அடுத்தடுத்து அவர் கைவசம் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது ஜெயம் ரவி ஜோடியாக சைரன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக, ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
Actress keerthy suresh
இதுவரை தென்னிந்திய சினிமாவில் கலக்கிய கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட்டிலும் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அந்த வகையில் இந்தியில் அவர் நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் அட்லீ தான் தயாரிக்க உள்ளார். இது தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
keerthy suresh in saree
இப்படி கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என செம்ம பிசியாக நடித்து வரும் கீர்த்தி போட்டோஷூட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கத்தரிப்பூ நிற சேலையில், செம்ம கிளாமராக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி. அவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... தாத்தா அண்ட் அப்பாவோட கலவை இவரு.. மகனை பார்த்து பெருமைப்படும் ஐஸ்வர்யா - பிரபல நடிகை போட்ட Cute கமெண்ட்!