தாத்தா அண்ட் அப்பாவோட கலவை இவரு.. மகனை பார்த்து பெருமைப்படும் ஐஸ்வர்யா - பிரபல நடிகை போட்ட Cute கமெண்ட்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன் யாத்ரா ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பெருமைப்பட்டுள்ளார்.
Aishwarya Dhanush Sons
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரங்காச்சாரி தம்பதிக்கு கடந்த 1982 ஆம் ஆண்டு பிறந்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் 3 படத்தின் மூலம் இவர் இயக்குனராக தமிழ் திரையுலகில் களமிறங்கினார்.
Aishwarya Dhanush and Soundarya
கடந்த 24 ஆம் ஆண்டு தன்னைவிட சுமார் இரண்டரை வயது இளையவரான பிரபல நடிகர் தனுஷ் அவர்களை திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ். இவருக்கு சௌந்தர்யா என்ற தங்கை உள்ளார், அவரும் ஒரு இயக்குனர் என்பது உலகறிந்ததே. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் தம்பதிக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். அடிக்கடி அவர்கள் இருவருடன் நடிகர் தனுஷ் படம் பார்க்க செல்வது வழக்கம். சுமார் 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது.
Dhanush Son
இந்நிலையில் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் மகன் யாத்திராவுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அவர் தன்னைவிட உயரமாக வளர்ந்து விட்டதை எண்ணி பெருமைப்பட்டுள்ளார். மேலும் பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி, அவர் மிகவும் உயரமாக வளர்ந்து விட்டார் என்று கூறி தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.