ஜவான் படத்துக்கு Free Ticket கிடைக்குமா? Girl Friendக்கு கொடுக்கணும் - ரசிகர் கேள்விக்கு ஷாருக் சொன்னது என்ன?
பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் உலகின் பாஷா என்று அழைக்கப்படும் சாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிப்பில், தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான்.
ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது. தற்பொழுது இந்த திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில் அடிக்கடி நடிகர் சாருக் கான் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ரசிகர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறார்.
இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் ஒரு ரசிகர் தனது பெண் தோழிக்கு ஜவான் திரைப்பட டிக்கெட் இலவசமாக கிடைக்குமா? என்று ஷாருக்கானிடம் கேட்க, ரொமான்ஸ் செய்யும்பொழுது இப்படி Cheapஆக நடந்து கொள்ளக் கூடாது, ஆகவே டிக்கெட்டுகளை பெற்று உங்களுடைய பெண் தோழியை அழைத்து சென்று படத்தை பார்த்து ரசியுங்கள் என்று நெத்தியடி பதில் ஒன்றை கூறியுள்ளார் சாருக் கான்..
அண்மையில் இந்த படத்தின் இசை மட்டும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சாருக் கான் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இந்த படத்திற்கு இசையமைக்கும் அனிருத் அவர்களை அவர் வெகுவாக பாராட்டினார். அரங்கிற்குள் பாடிக்கொண்டே அனிருத் உள்ளே நுழைய, அவரை கட்டித் தழுவி அவருடன் மேடையில் ஏறி நடனமாடி மகிழ்ந்தார் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.