இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், பிரபல நடிகர் கார்த்தி குரல் கொடுக்க, தற்போது வெளியாகி உள்ளது விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து கலக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ட்ரைலர்
பிரபல நடிகர் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. காமெடி, ஆக்சன், சயின்ஸ் பிக்சன் என்று கமர்சியலான பல விஷயங்கள் கொண்ட இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது.
நான் வில்லன்.. எப்பொழுதும் வில்லனாக தான் இருப்பேன்.. என்று கூறி பல பெண்களுடன் ஜாலியாக காட்சியளிக்கிறார் படத்தின் நாயகன் விஷால். அதே சமயம் ஒரு கேங்ஸ்டர் என்றால் டிசிப்ளின் வேண்டும் என்று கூறி மறுபுறம் களமிறங்குகிறார் படத்தின் மற்றொரு நாயகன் எஸ்ஜே சூர்யா தனக்கே உரித்தான ஸ்டைலில்.
சூர்யா பேசும் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது என்று தான் கூற வேண்டும். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் ஒரு சயின்டிஸ்ட்டாக களமிறங்கியுள்ளார். அவர் கண்டுபிடிக்கும் ஒரு டைம் டிராவல் சாதனத்தைக் கொண்டு எதிர்காலத்திற்கும், கடந்தகாலத்திற்கும் அலைபேசியில் பேசிக்கொள்ளும் வண்ணம் இந்த திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியுள்ள தெலுங்கு நடிகர் சுனில் அவர்களும் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் டிரைலரில் வெளியான காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்த சில காட்சிகள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்காலத்திலும், கடந்த காலத்திலும் நடக்கும் ஒரு சண்டையாக இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட மூன்று வேடங்களில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்க, வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
