MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்

நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய் கிழவி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், டிரெய்லர் வெளியீட்டில் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2026, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sivakarthikeyan Speech at Thaai Kizhavi Trailer Launch
Image Credit : X

Sivakarthikeyan Speech at Thaai Kizhavi Trailer Launch

'தாய் கிழவி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். சிவகுமார் முருகேசன் படத்தை இயக்குகிறார். தனக்கு ஒரு இடத்தைக் கொடுத்த இண்டஸ்ட்ரிக்கு ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுபோன்ற படங்களைத் தயாரிப்பதாகவும், யாருடனும் போட்டியிடவோ, யாரையும் முந்திச் செல்லவோ வரவில்லை என்றும், மக்கள் எப்போதும் தன்னுடன்தான் இருந்திருக்கிறார்கள் என்றும் கூறிய சிவகார்த்திகேயன், இண்டஸ்ட்ரிக்கு உள்ளே இருப்பவர்கள்தான் தனக்குத் தடையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

24
சிவகார்த்திகேயன் பேசியது என்ன?
Image Credit : X

சிவகார்த்திகேயன் பேசியது என்ன?

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிகர் விஜய்யைத்தான் குறிவைத்து பேசுகிறாரா என்பதுதான் சமூக வலைதளங்களில் நடக்கும் முக்கிய விவாதமாக உள்ளது. "எனக்கு ஒரு இடத்தைக் கொடுத்த இண்டஸ்ட்ரிக்கு ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இதுபோன்ற படங்களைச் செய்கிறேன். நான் யாருடனும் போட்டி போடவோ, யாரையும் தாண்டிப் போகவோ, யாரையும் தாக்கவோ, அழிக்கவோ வரவில்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். அதைச் செய்ய என்னை அனுமதியுங்கள் என்று மட்டுமே நான் கேட்கிறேன்," என பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Related Articles

Related image1
விருமாண்டியாக மாறிய சிவகார்த்திகேயன்... SK-வின் பிறந்தநாள் பரிசாக வந்த சேயோன் கிளிம்ப்ஸ்
Related image2
கோடிகளில் புரளும் ‘சிவகார்த்திகேயன்’ சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
34
சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Image Credit : X

சிவகார்த்திகேயன் ஸ்பீச்

தொடர்ந்து பேசிய அவர் "நான் இதுவரை ரீமேக் படங்கள் செய்ததில்லை. கதை கேட்டுதான் படங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். என் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானே பொறுப்பு என்று நம்புகிறேன். ஒவ்வொரு படத்திலும் நானும் ஒவ்வொரு விஷயத்தைக் கற்றுக்கொள்கிறேன். ஆரம்பம் முதலே மக்கள் எனக்கு ஆதரவளித்து உடன் இருக்கிறார்கள். எங்கோ இருந்த என்னை இங்கு கொண்டு வந்துள்ளனர். இண்டஸ்ட்ரிக்கு உள்ளே இருப்பவர்கள்தான் ஏதாவது தடை ஏற்படுத்துகிறார்கள். அதைத் தாண்டி முன்னேறி வர நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அந்தத் தடைகள் நீங்கினால், இன்னும் நான்கு சிவகுமார் முருகேசன்களை நான் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருவேன்," என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

44
சர்ச்சையான சிவகார்த்திகேயனின் பேச்சு
Image Credit : X

சர்ச்சையான சிவகார்த்திகேயனின் பேச்சு

சிவகார்த்திகேயனின் பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. அவர் தயாரித்துள்ள தாய் கிழவி திரைப்படம் வருகிற பிப்ரவரி 27ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் என்கிற திரைப்படத்தையும் இயக்குகிறார். அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். அமரன் வெற்றிக்கு பின்னர் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Recommended image2
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Recommended image3
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related Stories
Recommended image1
விருமாண்டியாக மாறிய சிவகார்த்திகேயன்... SK-வின் பிறந்தநாள் பரிசாக வந்த சேயோன் கிளிம்ப்ஸ்
Recommended image2
கோடிகளில் புரளும் ‘சிவகார்த்திகேயன்’ சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved