மூணு மாசம் தாங்காது.. ரெண்டும் அடிச்சுகிட்டு பிரிஞ்சுரும்னு சொன்னாங்க.. ஆனா - முதலாம் ஆண்டு கொண்டாடத்தில் மகா!
உண்மையிலேயே கடந்த ஆண்டு பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்தை தாண்டி பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு ஜோடியின் திருமணம் தான் ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம்.

பிரபல தயாரிப்பாளர் மற்றும் சினிமா விமர்சகர் ரவீந்தர் சந்திரசேகரன் பிரபல தொகுப்பாளினி மகாலட்சுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது என்பது இயல்பான ஒன்றுதான். அதே வகையில் தான் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி மிகப் பெரிய பேசுபொருளாக மாறினார்.
சிலர், உங்களுக்குள் தாம்பத்தியம் எப்படி சாத்தியமாகும் என்றெல்லாம் கூட இந்த ஜோடிகளை பார்த்து கேள்விகளை எழுப்பியதை நம்மால் மறக்க முடியாது. இந்நிலையில் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வரும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளனர்.
வந்துட்டாருயா.. வேட்டையன் ராஜா வந்துட்டாரு.. ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 - வெளியான ட்ரைலர்!
அதில் "ஒரு வருடம் எப்படி ஓடியது என்றே எங்களுக்கு தெரியவில்லை, போன வருடம் இந்த நாட்டினுடைய பிரதான பிரச்சினையாக இருந்தது எங்கள் திருமணம் தான். போகின்ற இடமெல்லாம் ஏதோ பொருட்காட்சி பொம்மையைப் போல பார்த்தார்கள். இது எப்படி சாத்தியமானது, நிச்சயம் இது பணத்திற்காக நடந்த ஒன்றுதான்.. மூன்று மாதம் தாங்குமா இந்த ஜோடி.. பார்ப்போம் இது எத்தனை நாள் தாங்குகிறது என்று.. சீக்கிரம் இரண்டும் அடித்துக் கொண்டு வீடியோ இன்டர்வியூ கொடுக்கும் பாருங்கள் என்று பலர் பேசினார்கள்".
"ஆனால் நாம் ஆசைப்பட்டு அதற்காக சின்சியரா இருக்கிற ஒரு வாழ்க்கை எனக்கு வரம்" என்று கூறியுள்ளார் ரவீந்தர். அவருடைய அதிக எடையால் இந்த ஜோடி பல்வேறு அவமானங்களை சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவை அனைத்தையும் கடந்து தற்போது இந்த ஜோடி தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளில் அடியெடுத்து வைத்துள்ளனர்.