வந்துட்டாருயா.. வேட்டையன் ராஜா வந்துட்டாரு.. ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 - வெளியான ட்ரைலர்!
சுமார் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபல மூத்த இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஏற்கனவே கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான ஆப்தமித்ரா மற்றும் மணிசித்திரதாழு ஆகிய திரைப்படங்களை தழுவி தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி.
வழக்கமான தனது ஸ்டைலை பெரிய அளவில் பயன்படுத்தாமல் அதிகமான மாஸ் டயலாக்ஸ் இல்லாமல் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான வெகு சில படங்களில் சந்திரமுகி திரைப்படமும் ஒன்று. ஓராண்டுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கனவுபோல் உள்ளது... புது கார் வாங்கிய குஷியில் குக் வித் கோமாளி மோனிஷா - அதோட விலை இத்தனை லட்சமா?
அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் எந்த அளவுக்கு காரணமோ அதே அளவிற்கு நடிகை ஜோதிகா மற்றும் முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி நடித்த வைகைப்புயல் வடிவேலு ஆகிய இருவரும் பெரும் காரணம் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் சுமார் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. வருகிற விநாயகர் சதுர்த்தி திருவிழா அன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இன்று செப்டம்பர் 3ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடிக்க, சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல நடிகர்கள் சுரேஷ் சந்திரா மேனன், ரவி மரியா மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நேற்று காலமான பிரபல நடிகர் ஆர்.எஸ். சிவாஜி அவர்களும் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.