Asianet News TamilAsianet News Tamil

பதுங்கிய பிரபாஸ்... பாய ரெடியான ஜெயம் ரவி! ரிலீஸ் தேதி உடன் வந்த ‘இறைவன்’ படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இறைவன் படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய டிரைலரை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டு உள்ளது.

Jayam Ravi and Nayanthara Starrer Iraivan movie Trailer with release date gan
Author
First Published Sep 3, 2023, 11:55 AM IST | Last Updated Sep 3, 2023, 11:55 AM IST

பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் தான் இறைவன். இப்படத்தை மனிதன், என்றென்றும் புன்னகை போன்ற திரைப்படங்களை இயக்கிய அஹமத் இயக்கி உள்ளார். இறைவன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

இறைவன் படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ராகுல் போஸ் வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹரி கே வேதந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்... ஜோடி பொருத்தம் பிரமாதம்.. மீண்டும் தனுஷுடன் இணைந்த அந்த ஹீரோயின்.. ஜோராக நடைபெறும் D50 படப்பிடிப்பு!

ஆனால் அந்த சமயத்தில் போதிய அளவு தியேட்டர் கிடைக்காத காரணத்தால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தனர். இந்த நிலையில், தற்போது இறைவன் படத்தின் மிரட்டலான டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. கொடூர கொலைகளை செய்யும் சைக்கோவை கொலைவெறியோடு தேடும் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி இப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது டிரைலர் மூலம் தெரிகிறது. இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் ராட்சசன் ஃபீல் கொடுப்பதாக பாராட்டி வருகின்றனர்.

இந்த டிரைலரோடு படத்தின் புது ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த தேதியில் பிரபாஸில் சலார் திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் அப்படம் தள்ளிப்போனதால், அந்த தேதியை லாக் செய்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது இறைவன். 

இதையும் படியுங்கள்... ஷூட்டிங்கே தொடங்கல அதுக்குள்ள தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட யுவன்.. விஜய் பாடுகிறாரா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios