MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?

தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?

பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன், சஸ்பென்ஸ், த்ரில்லர் மற்றும் ரொமான்டிக் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் காத்திருக்கின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2026, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தியேட்டர் ரிலீஸ் படங்கள்
Image Credit : X

தியேட்டர் ரிலீஸ் படங்கள்

பிப்ரவரி மாதம் இதுவரை தமிழ் சினிமாவிற்கு மோசமான மாதமாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில் இம்மாதம் தொடக்கத்தில் வெளியான வித் லவ் படம் மட்டும் தான் வெற்றிபெற்றது. அதன்பின்னர் திரைக்கு வந்த மை லார்ட் உள்ளிட்ட படங்கள் வந்த வேகத்தில் காணாமல் போயின. கடந்த வாரம் புதுப்படங்களைவிட ரீ ரிலீஸ் படங்கள் தான் அதிகளவில் வந்தன. அதனால் மூன்றாவது வாரமும் பெரியளவில் கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தை தமிழ் சினிமா மலைபோல் நம்பி இருக்கிறது. இந்த வாரம் தியேட்டரில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கணவர் - மனைவி படங்கள் மோதல்
Image Credit : X

கணவர் - மனைவி படங்கள் மோதல்

இந்த வாரம் தியேட்டரில் ஒரு வித்தியாசமான கிளாஷ் காத்திருக்கிறது. நடிகர் சரத்குமார் நாயகனாக நடித்த ஆழி என்கிற திரைப்படம் வருகிற பிப்ரவரி 27ந் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு போட்டியாக அவருடைய மனைவி ராதிகா நடித்த தாய் கிழவி படமும் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். அப்படத்தில் இளவரசு, பால சரவணன், சிங்கம்புலி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. இந்த இரு படங்களைத் தவிர ஆரி நடித்த ஃபோர்த் புளோர் மற்றும் ஏ படம் ஆகியவை திரைக்கு வர உள்ளன.

Related Articles

Related image1
ThaiKizhavi: சிவகார்த்திகேயன் குரலில் 'தாய் கிழவி வாரா'! இணையத்தை கலக்கும் அதிரடி பாடல்!
Related image2
வட்டி வசூல் வேட்டையில் ராதிகா – ஊரே தெறித்து ஓடுது: எஸ்கே தயாரிப்பில் வந்த தாய் கிழவி டீசர்!
34
ஓடிடி ரிலீஸ் வெப் தொடர்கள்
Image Credit : X

ஓடிடி ரிலீஸ் வெப் தொடர்கள்

தடயம்

சமுத்திரக்கனி நடித்த கிரைம் இன்வெஸ்டிகேஷன் வெப் தொடர் தான் தடயம். இந்த வெப் தொடர் வருகிற பிப்ரவரி 27 அன்று ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இன்வேஸ்டிகேஷன் திரில்லர் ரசிகர்களுக்கு இந்த வெப் தொடர் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CEO கிளப்

சிஇஓ கிளப் (CEO Club) என்ற வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் தற்போது ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதில் செரீனா வில்லியம்ஸ், வின்னி ஹார்லோ, லோரன் ரைடிங்கர், ஹன்னா ப்ரோன்ஃப்மேன், இசபெல்லா ரங்கெலி க்ரூட்மேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாரடைஸ் சீசன் 2

பாரடைஸ் வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது. முதல் சீசனின் தொடர்ச்சியாக, ரகசிய ஏஜென்ட் சேவியர் காலின்ஸ் தனது மனைவி டெரி உயிருடன் இருப்பதை கண்டுபிடிப்பார். இதில் ஸ்டெர்லிங் கே. பிரவுன், ஜூலியன் நிக்கல்சன், சாரா ஷாஹி, நிக்கோல் பிரைடன் ப்ளூம் ஆகியோர் நடித்துள்ளனர்.

44
ஓடிடி ரிலீஸ் படங்கள்
Image Credit : instagram

ஓடிடி ரிலீஸ் படங்கள்

தி பிளஃப் திரைப்படம்

பிரியங்கா சோப்ராவின் 'தி பிளஃப்' திரைப்படம் பிப்ரவரி 25 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இப்படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகும். சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் நிறைந்த இப்படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் கார்ல் அர்பன், இஸ்மாயில் குரூஸ் கார்டோவா, சோபியா ஓக்லி கிரீன் மற்றும் டெமுரா மோரிசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் திரைப்படம்

அமெரிக்க ஆக்‌ஷன்-த்ரில்லர் பிளாக் காமெடி படமான 'ஒன் பாட்டில் ஆஃப்டர் அனதர்' பிப்ரவரி 26 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதில் லியோனார்டோ டிகாப்ரியோ, ஷான் பென், பெனிசியோ டெல் டோரோ, ரெஜினா ஹால், டெய்னா டெய்லர் மற்றும் சேஸ் இன்ஃபினிட்டி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், 'பிரிட்ஜெர்டன்' சீசன் 4-ன் இரண்டாம் பாகம் பிப்ரவரி 26 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும்.

இக்கீஸ் திரைப்படம்

அகஸ்தியா நந்தாவின் 'இக்கீஸ்' திரைப்படம் பிப்ரவரி 26 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். இதில் தர்மேந்திரா, சிமர் பாட்டியா, ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், தெலுங்கு படமான 'ஸ்ரீ சிதம்பரம் காரு' பிப்ரவரி 26 முதல் ETV Win-ல் வெளியாகிறது. இதில் வம்சி தும்மாலா மற்றும் சந்தியா வசிஷ்டா நடித்துள்ளனர்.

அக்யூஸ்டு திரைப்படம்

கொங்கனா சென் சர்மா மற்றும் பிரதிபா ராண்டாவின் 'அக்யூஸ்டு' திரைப்படம் பிப்ரவரி 27 முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. இது ஒரு த்ரில்லர் படம். மேலும், மலையாள படமான 'ரோஸ்லின்: சீக்ரெட் ஸ்டோரீஸ் அன்ஃபோல்ட்' பிப்ரவரி 27 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 'அந்தா பியார் 2.0' திரைப்படம் பிப்ரவரி 28 முதல் ஜீ5-ல் பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Recommended image3
Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Related Stories
Recommended image1
ThaiKizhavi: சிவகார்த்திகேயன் குரலில் 'தாய் கிழவி வாரா'! இணையத்தை கலக்கும் அதிரடி பாடல்!
Recommended image2
வட்டி வசூல் வேட்டையில் ராதிகா – ஊரே தெறித்து ஓடுது: எஸ்கே தயாரிப்பில் வந்த தாய் கிழவி டீசர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved