Thaaikizhavi Movie Teaser Released : எஸ்கே புரோடக்‌ஷ்ன்ஸ் தயாரிப்பில் ராதிகா கிழவியாக நடித்து வரும் தாய் கிழவி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ராதிகா. சிவாஜி கணேசனுக்கு மனைவியாக நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சிவகுமார், பிரபு, விஜயகாந்த், முரளி, ராகவா லாரன்ஸ், பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், சரத்குமார் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படம் மூலமாக சினிமாவில் கால் பதித்த ராதிகா, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்த ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் போதுமான வரவேற்பு கொடுக்கவில்லை. இப்போது தாய் கிழவி என்ற படத்தில் வயதான பாட்டி ரோலில் நடித்துள்ளார். மேலும், கிராமத்தையே தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஒரு பாட்டி. இவரைக் கண்டாலே கிராமத்தைச் சேர்ந்த அத்தனை ஆண்களும் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஏனென்றால் வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இவரிடம் வட்டிக்கு வாங்கியவர்கள் எல்லாம் அதனை கொடுக்காமல் இழுத்தடிக்கும் நிலையில், அதை எப்படி வசூல் செய்கிறார், அவருக்கு சாவு வராதா என்று ஏங்கும் கிராமத்தினருக்கு மத்தியில் எப்படி வாழ்கிறார என்பது தான் தாய் கிழவி படத்தின் கதை. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார்.

சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தாய் கிழவி படத்தில் ராதிகா உடன் இணைந்து சிங்கம் புலி, அருள் தாஸ், பால சரவணன், முனீஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துகுமார், ராய்ச்சல் ரெபெகா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. கிராமத்து கதை என்பதால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று தெரிகிறது.

Thaai Kizhavi - Official Teaser | Radikaa Sarathkumar | Sivakumar Murugesan | Nivas K Prasanna