MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘ஊரையே அடக்கி ஆண்ட தேவரய்யா...’ சிவாஜிக்கு இப்படி ஒரு மரணமா..? ரகசியம் உடைத்த கவுண்டமணி..!

‘ஊரையே அடக்கி ஆண்ட தேவரய்யா...’ சிவாஜிக்கு இப்படி ஒரு மரணமா..? ரகசியம் உடைத்த கவுண்டமணி..!

அந்த பதிலை எதிர்பார்க்காத சிவாஜி வாயை பொத்தி திகைத்துப் போனார். முன்னாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை இப்போது வெகுமானம் ஆக்கிக் கொண்டு வீடு திரும்பினார் கவுண்டமணி.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 12 2026, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிவாஜி கணேசன் வீட்டில் விருந்து
Image Credit : x

சிவாஜி கணேசன் வீட்டில் விருந்து

நடிகர் திலகம் சிவாஜி சோர்வாகவோ அல்லது மனக்கஷ்டத்தில் இருந்தாலோ ‘‘யேப்பா.. அந்த கவுண்டமணி ஜோக்குகளை கொஞ்சம் போட்டு விடுங்கப்பா..’’ எனச் சொல்லி அவரது நகைச்சுவை காட்சிகளை பார்த்து மனதை புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்வாராம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆனாலும், கவுண்டமணிக்கும், சிவாஜிக்கும் இடையே ஒரு ஈகோ யுத்தம் நடந்து கொண்டே இருந்திருக்கிறது.

சிவாஜி கணேசன் வீட்டில் அடிக்கடி விருந்து நடப்பது வழக்கம். ஆனால், கவுண்டமணி யார் வீட்டிற்கும் விருந்துக்கு செல்ல மாட்டார். கவுண்டமணியின் இந்தக் கொள்கையை அறிந்து, அதை உடைத்தெரிய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் சிவாஜி. அப்போது பல படங்களில் இணைந்து நடித்துக் கொண்டு இருந்ததால் பிரபுவுக்கும், கவுண்டமணிக்கும் நல்ல நட்பு இருந்தது. அந்த நட்பை வைத்து பிரபு மூலம் கவுண்டமணியை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுக்கத் திட்டமிட்டார் சிவாஜி.

24
அன்னை இல்லத்தில் கவுண்டமணிக்கு விருந்து
Image Credit : Google

அன்னை இல்லத்தில் கவுண்டமணிக்கு விருந்து

‘அந்த கவுண்டரை விருந்துக்கு அழைத்து வா..’’ என சிவாஜி கட்டளையிட, பிரபு, கவுண்டமணி வீட்டிற்கு கிளம்பினார். அங்கே சென்ற பிறகு ‘‘அண்ணே... அப்பா இதுவரை யாரையுமே வீட்டிற்கு சென்று விருந்துக்கு அழைத்ததில்லை. உங்களைத் தான் இப்படி முதல் முறையாக அழைத்திருக்கிறார். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது’’ என சிலாகித்துச் சொல்ல, கவுண்டமணியால் மறுக்க முடியவில்லை. அப்போது சிவாஜியின் அன்னை இல்லத்திற்குள் பலரும் உணவருந்திக் கொண்டிருந்தனர். கவுண்டமணி காரிலிருந்து இறங்கி வருவதை பார்த்து விட்ட சிவாஜி. ‘‘ என்னய்யா கவுண்டர்... நலமா..?’’ என வரவேற்று உட்கார வைத்துவிட்டார்.

எல்லோரும் வீட்டிற்குள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, கவுண்டமணிக்கு வரவேற்பு அறையிலேயே சாப்பாட்டை போட்டார்கள். அத்தோடு அவமானப்படுத்தாமல் விட்டாரா சிவாஜி? ‘‘கவுண்டரே நம்ம வீட்ல இப்படி விருந்து வைக்கிறது அடிக்கடி நடக்கிறதுதான். நாலு பேருக்கு சாப்பாடு போட்டு அனுப்புவது எங்க வீட்டு வழக்கம். பாவம் இல்லாத ஏழைகளுக்கு சாப்பாடு போட்டா அந்த புண்ணியம் நமக்கு தானே. அதுதான் உன்னையும் கூப்பிட்டேன்’’ என நேராகவே கவுண்டமணியை அவமானப்படுத்தி விட்டார் சிவாஜி.

Related Articles

Related image1
அதிமுக- தேமுதிக கூட்டணியை உடைத்த சசிகலா... ஸ்டாலினுடன் சதித் திட்டம்..? அதிர வைக்கும் பின்னணி..!
34
தேவர் மகனால் சிலாகித்த சிவாஜி
Image Credit : Google

தேவர் மகனால் சிலாகித்த சிவாஜி

இந்த சம்பவம் நடந்து ஓரிரு ஆண்டுகள் கழிந்தது. தேவர்மகன் படத்தின் பிரிவியூ காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த தியேட்டருக்கு கவுண்டமணியும் வந்திருந்தார். எல்லோரும் படத்தைப் பார்த்து வெகுவாக சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். இதனால் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார் சிவாஜி. படம் முடிந்த பிறகு கவுண்டமணி ஓரமாக ஒதுங்கி வெளியேற முயற்சித்தார். அதை பார்த்துவிட்ட சிவாஜி, ‘‘அதோ போறான் பாரு கவுண்டர். அவனை கூப்பிடுங்க’’ என அழைக்க, கவுண்டமணி, சிவாஜி அருகில் வந்தார். அப்போது ‘‘தேவர் இந்த படத்துல வாழ்ந்திருக்காரா..? எப்படி நம்ம நடிப்பு? ஊரையே கட்டுப்பாட்டுக்குள்ள வைச்சிருக்கிற தேவர் கம்பீரமா இருக்காரா? எனக் கேட்டார்.

‘‘படத்தை பத்தி ஒன்னு சொல்வேன். நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது’’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். சிவாஜியும் அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன். படத்தை பற்றிய உன் கருத்தை சொல்லு என கேட்டிருக்கிறார். உடனே கவுண்டமணி, ‘‘நீங்க படத்துல பெரிய தேவர். நீங்க நடந்தா ஊரே நடக்குது... நீங்க நின்னா ஊரே உட்காருது. அப்படி அவ்வளவு பெரிய ஆளா படத்துல வரீங்க. ஆனா ஒன்னு இவ்ளோ பெரிய மனுஷன் நீங்க. ஒரு சின்ன புள்ளை மிதிச்சதால செத்து போயிட்டீங்களே. இதைத் தாண்டி படத்துல சொல்ல ஒன்னும் இல்லை’’ என ஒரே போடாக போட்டிருக்கிறார்.

44
சிவாஜியை வாயடைக்க வைத்த கவுண்டமணி
Image Credit : Asianet News

சிவாஜியை வாயடைக்க வைத்த கவுண்டமணி

அந்த பதிலை எதிர்பார்க்காத சிவாஜி வாயை பொத்தி திகைத்துப் போனார். முன்னாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை இப்போது வெகுமானம் ஆக்கிக் கொண்டு வீடு திரும்பினார் கவுண்டமணி. இந்த தகவலை மறைந்த முன்னாள் சினிமா பத்திரிகையாளர் நெல்லை பாரதி பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

TR
Thiraviya raj
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதங்கத்தை கொட்டிய அஞ்சலி... மன்னிப்பு கேட்ட சரவணன்; தங்கமயில் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
கமல் இப்படிப்பட்டவரா? உதவி கேட்டு சென்றவரை அசிங்கப்படுத்தி அனுப்பிய கமல்? கண்ணீருடன் பகிர்ந்த காமெடி நடிகர்.!
Recommended image3
மதிவதினியை காப்பாற்றிய ஜனனி... கடைசியில் ட்விஸ்ட் வைத்த கிட்னி திருடன் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Related Stories
Recommended image1
அதிமுக- தேமுதிக கூட்டணியை உடைத்த சசிகலா... ஸ்டாலினுடன் சதித் திட்டம்..? அதிர வைக்கும் பின்னணி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved