- Home
- Tamil Nadu News
- அதிமுக- தேமுதிக கூட்டணியை உடைத்த சசிகலா... ஸ்டாலினுடன் சதித் திட்டம்..? அதிர வைக்கும் பின்னணி..!
அதிமுக- தேமுதிக கூட்டணியை உடைத்த சசிகலா... ஸ்டாலினுடன் சதித் திட்டம்..? அதிர வைக்கும் பின்னணி..!
அதிமுக கூட்டணி தோற்க வேண்டும். அதற்காக சசிகலாவை வற்புறுத்தி எல்லா தொகுதிகளிலும் அவரது ஆதரவாளர்களை போட்டியிட வைக்க வேண்டும்.

அதிமுக- தேமுதிக கூட்டணியை உடைத்த சசிகலா
அதிமுகவை வீழ்த்த மு.க.ஸ்டாலின், சசிகலாவை தூண்டி விடுவதாகவும், அதன் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் முன்னாள் காவல்துறை அதிகாரியும், வழக்கறிஞருமான வரதராஜன் பகீர் கிளப்பியுள்ளார்.
இது குறித்து அவர், ‘‘அதிமுக கூட்டணியை திட்டமிட்டு உடைக்க ஆரம்பிச்சிட்டார் சசிகலா. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 15 சீட்டு எனப் பேசி கையெழுத்து போட வேண்டிய நிலையில், ஸ்டாலின் சசிகலாவுக்கு போன் செய்து அதனை தடுத்து விட்டார். சசிகலாவுக்கும், ஸ்டாலினுக்கும் அரசியல் ரீதியாக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கூட்டணிகளை உடைக்கும் வேலையை ஸ்டாலின் சொன்னால் சசிகலா செய்கிறார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் போய் தேமுதிக, இணைய இருந்ததை கடைசி நேரத்தில் போய் கொடுத்து, தேமுதிகவை, டிடிவி. தினகரன் கூட்டணியில் இணைய வைத்தார் சசிகலா. சசிகலாவிடம் பேசி கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து தேமுதிகவை டிடிவி.தினகரனுடன் கூட்டணி சேர வைத்து அதிமுக ஓட்டையை பிரித்தார்கள்.
டிடிவி.தினகரனின் நம்பிக்கை துரோகம்
அதை பிரிக்காமல் இருந்திருந்தால் ஸ்டாலின் முதலமைச்சராக வந்திருக்க முடியாது. இப்போது டிடிவி.தினகரன் அதிமுக பக்கம் போய் விட்டார். எல்லோரும் அந்தப் பக்கம் போய் விட்டார்கள். வெற்றி பெற்று விடுவார்கள் என்று பயந்து ஸ்டாலின், சசிகலாவை தூண்டிவிட்டு தேர்தல் வரை வாயை திறக்காமல் இருந்த சசிகலா இப்போது ஒவ்வொருவராக பார்க்க ஆரம்பித்து இருக்கிறார். டிடிவி.தினகரன் கட்சியில் இருந்து ஒருவர் போய் சசிகலாவை பார்த்தார். ஆனால், டிடிவி.தினகரன் அடுத்த நொடியே அந்த பெண்மணியை கட்சியை விட்டு விலக்கி விட்டார்.
அது நம்பிக்கை துரோகம். சசிகலா இல்லை என்றால் டிடிவி.தினகரன் இல்லை. சசிகலாவின் பணம்தான் டிடிவி.தினகரனிடம் விளையாடுகிறது. இது அரசியலின் நம்பிக்கை துரோகம். நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு சித்தியை பார்த்தவர்களை கட்சியை விட்டு விலக்கி வைக்கிறார். இந்நிலையில் சசிகலா இப்போது எல்லோரையும் ரகசியமாக சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் நீங்கள் ஆட்களை நிறுத்துங்கள். செலவு முழுவதையும் நான் பார்த்துக் கொள்கிறேன். அதிமுக ஓட்டையை பிரியுங்கள். அதிமுக கூட்டணி தோற்க வேண்டும். அதற்காக சசிகலாவை வற்புறுத்தி எல்லா தொகுதிகளிலும் அவரது ஆதரவாளர்களை போட்டியிட வைக்க வேண்டும். அதற்காக சசிகலா கட்சி ஒன்றை ஆரம்பித்து ஆட்களை நிறுத்துவது என்று சதி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
சசிகலா- ஸ்டாலின் நட்பு பின்னணி
பாஷ்யம் பில்டர்ஸ் அபினேஷிடம் சசிகலாவின் பணம் ரூ.500 கோடி கொடுத்திருக்கிறார். அதை திரும்பக் கேட்டால் அபினேஷ் பாஜக, திமுக தொடர்புகளை வைத்து திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். இந்த அபினேஷுக்கு சபரீசன் மிக நெருக்கம். அந்த பணத்தை திரும்பப் பெறும் நோக்கில் ஸ்டாலின் சொல்வதை கேட்டு இந்தச் செயலில் சசிகலா இறங்கி இருக்கிறார்.
சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடப் போகிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் எப்போதும் போட்டியிடுவார். அருப்புக்கோட்டை நாடளுமன்ற தொகுதி என இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் போட்டியிடுவார். அவர் உயிருடன் இருந்தவரை யாராலும் தோற்கடிக்கவே முடியவில்லை. அவரது சிஷ்யர் முத்தையா தேவர் எப்போதும் உசிலம்பட்டியில்தான் நிற்பார். உசிலம்பட்டியில் ஜாதியை பார்க்காமல் எல்லோருமே அவருக்கு ஓட்டு போடுவார்கள். அந்த அளவுக்கு உசிலம்பட்டி தொகுதியை வைத்திருந்தார்.
சசிகலாவின் நம்பிக்கை
சசிகலா தஞ்சாவூர் சேர்ந்தவர். ஆனால், அவர் அந்த தொகுதியில் போய் நிற்கிறார். உசிலம்பட்டி அவருக்கு இதற்கு முன்னால் அறிமுகம் இல்லை. மூக்கையா தேவருக்கு அப்பகுதி மக்கள் முக்கியத்துவம் கொடுத்த ஆதரவு ஆதரவு அளித்தது போல், அந்த மக்கள் சசிகலாவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் போய் உசிலம்பட்டியில் நிற்கிறார் சசிகலா’’ எனத் தெரிவித்துள்ளார்.
