MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய் எனக்கு ஒரு பொருட்டே இல்லை..! விஜய் கொண்டையை இரண்டாக பிளந்த எடப்பாடி பழனிச்சாமி

விஜய் எனக்கு ஒரு பொருட்டே இல்லை..! விஜய் கொண்டையை இரண்டாக பிளந்த எடப்பாடி பழனிச்சாமி

தமிழக அரசியல் களத்தில் யார் பலசாலி, யாரை வீழ்த்த வேண்டும் என்று அதிமுகவுக்கு நன்றாகவே தெரியும், நாங்கள் விஜய்யை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 12 2026, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
உழைப்பால் முதல்வரானவன் நான்..
Image Credit : ADMK

உழைப்பால் முதல்வரானவன் நான்..

இந்தியா டுடே நிறுவனம் சார்பில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயியாக வளர்ந்து கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து உழைப்பால் முன்னேறி நான் முதல்வரானேன்.

24
கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலின் முதல்வரானார்
Image Credit : Asianet News

கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலின் முதல்வரானார்

ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அப்படி கிடையாது. அவர் பிறப்பாலே அரசியல் பின்புலம் கொண்டவர். நானும், ஸ்டாலினும் ஒரே நேரத்தில் தான் சட்டமன்ற உறுப்பனர்களானோம். ஆனால் நாங்கள் இருவரும் கடந்து வந்த பாதை ஒன்று கிடையாது. கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலின் முதல்வராகி உள்ளார்.

Related Articles

Related image1
மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்.. ராகுல் அதிருப்தி.. கதர்க்கட்சியை 'கை' விட்ட திமுக!
Related image2
விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கவே கூடாது..! ஸ்டாலின் காங்கிரஸை விரட்டி அடிச்சிருக்கணும்..! சீமான் தடாலடி..!
34
கடன் வாங்கி வைத்துக் கொண்டு வளர்ச்சி என்பதா..?
Image Credit : Asianet News

கடன் வாங்கி வைத்துக் கொண்டு வளர்ச்சி என்பதா..?

திராவிட மாடல் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக 2026 தேர்தலில் திமுக வெற்றிபெற்றுவிடும் என்றும் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பாக நேரடியாக விவாதம் நடத்த பலமுறை அழைப்பு விடுத்துவிட்டேன். ஆனால் தற்போது வரை ஸ்டாலின் விவாதத்திற்கு வரவில்லை.

மேலும் பொருளாதாரத்தில் திமுக ஆட்சியில் 11 விழுக்காடு பெற்று நாட்டிலேயே தமிழகம் தான் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அளவுக்கு அதிகமாக கடனை பெற்றுக் கொண்டு அதனை வளர்ச்சி என கணக்கு காட்டுவது பொருத்தமாக இருக்காது. திமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமான கடன் பெறப்பட்டுள்ளது. இது தான் ஸ்டாலின் மற்றும் திமுக அரசின் சாதனை என்றார்.

44
தவெக ஒரு பொருட்டே இல்லை..
Image Credit : Asianet News

தவெக ஒரு பொருட்டே இல்லை..

தொடர்ந்து தமிழக அரசியலில் திமுக, தவெக இடையே தான் போட்டி என விஜய் கூறி வருவது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பழனிசாமி, “தமிழக அரசியல் களத்தில் யார் பலமாக இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். மேலும் அரசியல் நிலவரம் எங்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கையில் நாங்கள் தமிழக வெற்றி கழகத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அதனால் நாங்கள் அவர்கள் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது” என்று பதில் அளித்தார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Recommended image2
போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்
Recommended image3
எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிங்க.. தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் மின்தடை.!
Related Stories
Recommended image1
மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்.. ராகுல் அதிருப்தி.. கதர்க்கட்சியை 'கை' விட்ட திமுக!
Recommended image2
விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கவே கூடாது..! ஸ்டாலின் காங்கிரஸை விரட்டி அடிச்சிருக்கணும்..! சீமான் தடாலடி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved