MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • CM Vijay: விஜய்க்கு சிம்மாசனம் கிடைத்தது எப்படி.?! சினிமாவிலும், அரசியலிலும் வெற்றியை தேடி கொடுத்த சீக்ரெட் இதுதான்.!

CM Vijay: விஜய்க்கு சிம்மாசனம் கிடைத்தது எப்படி.?! சினிமாவிலும், அரசியலிலும் வெற்றியை தேடி கொடுத்த சீக்ரெட் இதுதான்.!

ஆரம்பகால தோல்விகளை தனது விடாமுயற்சி மற்றும் ஒழுக்கத்தால் வெற்றிகளாக மாற்றியவர் தளபதி விஜய். பல சவால்களையும் கடந்து, அரசியலிலும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வராக உயர்ந்த அவரது பயணம், உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 22 2026, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
உச்சத்தை தொட வைத்த உழைப்பு
Image Credit : X

உச்சத்தை தொட வைத்த உழைப்பு

ஒரு மனிதரின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல; விடாமுயற்சி, ஒழுக்கம், சரியான நேரத்தில் எடுத்த முடிவுகள் ஆகியவையே உண்மையான காரணங்கள். அதற்கு சிறந்த உதாரணமாக திகழ்பவர் தமிழக முதல்வர் தளபதி விஜய். சினிமாவில் இயக்குநரின் மகனாக அறிமுகமானாலும், அதன் பின்னர் ஒவ்வொரு வெற்றியையும் தனது உழைப்பால் மட்டுமே கட்டியெழுப்பியவர். இன்று அரசியலிலும் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பது, தொடர்ந்து போராடிய மனப்பக்குவத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசாகவே பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
விஜய்யை ரிஜக்ட் செய்த இயக்குனர்கள்
Image Credit : X

விஜய்யை ரிஜக்ட் செய்த இயக்குனர்கள்

விஜயின் ஆரம்பகால சினிமா பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த பல இயக்குநர்களிடம் பேசியதாக கூறப்பட்டாலும், பலரும் தயக்கம் காட்டினர். இறுதியில் ரசிகன் படத்தின் மூலம் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த அறிமுகம் மட்டுமே வெற்றியை உறுதி செய்யவில்லை. ஆரம்பத்தில் பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை.

Related Articles

Related image1
Now Playing
CM Vijay Birthday: பிறந்த உடனே தங்க மோதிரம்..! 6 குழந்தைகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
Related image2
Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ
36
சினிமாவை கற்றுக்கொடுத்த முதல் 10 படம்
Image Credit : Asianet News

சினிமாவை கற்றுக்கொடுத்த முதல் 10 படம்

விஜயை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது அவரது ஒழுக்கமும், அர்ப்பணிப்பும். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவது, தினமும் நடனப் பயிற்சி செய்வது, சண்டைக் காட்சிகளுக்காக தனியாக தயாராவது, நடிப்பில் தொடர்ந்து முன்னேற்றம் காண முயற்சிப்பது போன்ற பழக்கங்கள் அவரை மெல்ல மெல்ல உயர்த்தின. அவரைப் பற்றிய விமர்சனங்களையும் வதந்திகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தனது இலக்கில் மட்டுமே கவனம் செலுத்தியதே அவரது மிகப்பெரிய பலமாக அமைந்தது. முதல் 10 படங்கள் அவருக்கு பல  புதிய அனுபவங்களை தந்ததாக விஜய் தனது நண்பர்களிடம் சொல்லி வந்துள்ளார்.  

46
கைகொடுத்து தூக்கிவிட்ட விஜயகாந்த்
Image Credit : X

கைகொடுத்து தூக்கிவிட்ட விஜயகாந்த்

அடித்தட்டு மக்களிடம் தனது முகத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக விஜயகாந்துடன் இணைந்து நடித்ததும் அவரது சினிமா பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, குஷி, கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, மெர்சல், மாஸ்டர், லியோ போன்ற வெற்றிப்படங்கள் மூலம் வசூல் நாயகனாக மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதிலும் நிரந்தர இடத்தைப் பிடித்தார். எந்த வகையான கதைகள் ரசிகர்களை கவரும் என்பதை சரியாக கணித்து, அதற்கேற்ற கதைகளை தேர்வு செய்ததே அவரது வெற்றியின் முக்கிய ரகசியமாக அமைந்தது.

56
சவால்கள் நிறைந்த அரசியல் பயணம்
Image Credit : X

சவால்கள் நிறைந்த அரசியல் பயணம்

அரசியலிலும் விஜயின் பயணம் சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. தேர்தல் களத்தில் குதித்த பிறகு பல்வேறு தடைகள், விமர்சனங்கள், அரசியல் தாக்குதல்கள் என பல சோதனைகளை அவர் எதிர்கொண்டார். பிரசாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்க குறித்து விமர்சனம் செய்து அவதூறு பரப்பப்பட்டது.  ஆனால் அவற்றை எல்லாம் அமைதியாக சமாளித்து, மக்கள் மத்தியில் நேரடியாக சென்று தனது கொள்கைகளை எடுத்துரைத்தார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களித்தவர்களின் நம்பிக்கையை பெற்றது அவரது மிகப்பெரிய பலமாக அமைந்தது. இறுதியில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வராக உயர்ந்தார்.

66
உண்மையான சாதனை இதுதான்
Image Credit : CM Vijay FB

உண்மையான சாதனை இதுதான்

விஜயின் வாழ்க்கை சொல்லும் மிகப்பெரிய பாடம் ஒன்று தான் – வாய்ப்பு கிடைப்பது முக்கியமல்ல; கிடைத்த வாய்ப்பை உழைப்பால் வெற்றியாக மாற்றுவதுதான் உண்மையான சாதனை. தோல்வியை கண்டு துவளாமல், விமர்சனங்களை பொருட்படுத்தாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்த உயரத்தையும் அடைய முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அதனால் தான் இன்று பல லட்சம் இளைஞர்களுக்கு அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழும் ஒரு ரோல் மாடலாக பார்க்கப்படுகிறார்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
அரசியல்
அரசியல் சுவாரஸ்யம்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
Recommended image2
பாஜக பக்கம் சாயும் திமுக? பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க திட்டம்? பரபரக்கும் டெல்லி.! திமுகவின் அடுத்த மூவ் என்ன?
Recommended image3
அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் பிறந்த நாளில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு?
Related Stories
Recommended image1
Now Playing
CM Vijay Birthday: பிறந்த உடனே தங்க மோதிரம்..! 6 குழந்தைகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
Recommended image2
Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved