MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்.. ராகுல் அதிருப்தி.. கதர்க்கட்சியை 'கை' விட்ட திமுக!

மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்.. ராகுல் அதிருப்தி.. கதர்க்கட்சியை 'கை' விட்ட திமுக!

திமுகவை பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கூடுதல் கொடுக்கலாம். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டது. இப்போது ஸ்டாலினே இதை தெரிவித்து விட்டதால் ராகுல் காந்தி கடும் அப்செட் ஆகி விட்டாராம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 11 2026, 07:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திமுக, காங்கிரஸ் கூட்டணி
Image Credit : x

திமுக, காங்கிரஸ் கூட்டணி

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ், திமுக கூட்டணி நிலைக்குமா? இல்லை முறியுமா? என்பதே இப்போது தமிழகத்தின் பேசுபொருளாக உள்ளது. கூட்டணியில் உள்ள பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும். கூடுதல் தொகுதிகள் கொடுக்க வேண்டும் என திமுகவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

ஆட்சியில் பங்கு வேண்டும்

அதிமுகவும் பாஜகவுடன் உள்ளதால் தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக கூட்டணியில் சேர வேறு சாய்ஸ் இல்லாமல் காங்கிரசுக்கு இருந்து வந்தது. 

ஆனால் விஜய்யின் தவெக லட்டு போல் வந்து சேர்ந்ததால் இதை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், ஒருபக்கம் ஒரு சில தலைவர்களை 'திமுக கூடுதல் சீட் தர வேண்டும். ஆட்சியில் பங்கு தர வேண்டும்' என பேச வைத்து விட்டு மறுபக்கம் மற்ற தலைவர்களை 'திமுகவை விட்டு எப்போதும் வெளியேற மாட்டோம்' என கூற வைத்து டபுள் கேம் ஆடி வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்
Image Credit : Asianet News

மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு வேண்டி திமுகவிடம் தொடர்ந்து வம்பிழுத்து வர, செல்வபெருந்தகை திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தொடர்ந்து சொல்லி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு கட்டத்தில் திமுகவும், காங்கிரம் சமூக வலைத்தளத்தில் வார்த்தை போரில் ஈடுபட்டன. 

இந்த விவகாரத்தில் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக கருத்து கூறாமல் இருந்து வந்த நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எல்லாத்துக்கும் சேர்த்து முற்றுப்புள்ளி வைத்தார்.

ஸ்டாலின் சொன்னது என்ன?

இது தொடர்பாக பேசிய ஸ்டாலின், ''தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது வழக்கத்தில் இல்லை. இது சரியான நடைமுறையாக இருக்காது. இதை நாங்களும் புரிந்துள்ளோம். அவர்களும் (காங்கிரஸ்) புரிந்துள்ளார்கள். 

ஆனால் ஒரு சிலர் தான் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார். திமுக தலைவரே ஆட்சியில் பங்கு இல்லை என அறிவித்து விட்டது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

Related Articles

Related image1
விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கவே கூடாது..! ஸ்டாலின் காங்கிரஸை விரட்டி அடிச்சிருக்கணும்..! சீமான் தடாலடி..!
Related image2
ஆட்சியில் பங்கு வேண்டும்.. கனிமொழியிடம் நேரடியாக கேட்ட ராகுல் காந்தி.. வெளியான தகவல்!
33
ராகுல் காந்தியின் பிளான் என்ன?
Image Credit : Asianet News

ராகுல் காந்தியின் பிளான் என்ன?

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கூட்டணி தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை இரண்டு முறை அழைத்து பேசினார். அப்போது பெரும்பாலானவர்கள் திமுகவிடம் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும். அவர்கள் கொடுக்க மறுத்தால் தவெகவுடன் கூட்டணி சேர வேண்டும் என கூறியுள்ளனர். 

இதற்கு ராகுல் காந்தியும் தலையசைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பாக கனிமொழி தன்னை சந்தித்தபோதும் ராகுல் காந்தி இதை வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

ராகுல் காந்தி அப்செட்

ஆனால் திமுகவை பொறுத்தவரை கடந்த முறையை விட இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கூடுதல் கொடுக்கலாம். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டது. 

இப்போது ஸ்டாலினே இதை தெரிவித்து விட்டதால் ராகுல் காந்தி கடும் அப்செட் ஆகி விட்டாராம். திமுகவின் இந்த அதிரடி முடிவு அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. ஆகவே இந்த கூட்டணி நிலைக்குமா? இல்லை உடையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தேசிய காங்கிரஸ்
திமுக
மு. க. ஸ்டாலின்
ராகுல் காந்தி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்..
Recommended image2
Magalir Urimai Thogai Scheme: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையதா?
Recommended image3
UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Related Stories
Recommended image1
விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கவே கூடாது..! ஸ்டாலின் காங்கிரஸை விரட்டி அடிச்சிருக்கணும்..! சீமான் தடாலடி..!
Recommended image2
ஆட்சியில் பங்கு வேண்டும்.. கனிமொழியிடம் நேரடியாக கேட்ட ராகுல் காந்தி.. வெளியான தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved