MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கவே கூடாது..! ஸ்டாலின் காங்கிரஸை விரட்டி அடிச்சிருக்கணும்..! சீமான் தடாலடி..!

விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கவே கூடாது..! ஸ்டாலின் காங்கிரஸை விரட்டி அடிச்சிருக்கணும்..! சீமான் தடாலடி..!

முதல்வர் ஸ்டாலின் சொல்வது ரொம்ப தாமதம். அவர்கள் ஆட்சியில் பங்கு என்று கேட்டார்கள். அப்படியானால் கொடுக்குற கட்சிக்கு போங்கள் என்று ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 11 2026, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆட்சியில் பங்கு கொடுக்கிற அளவுக்கு எந்த கட்சி இருக்கிறது?
Image Credit : Asianet News

ஆட்சியில் பங்கு கொடுக்கிற அளவுக்கு எந்த கட்சி இருக்கிறது?

‘‘தம்பி விஜயை காட்டிகிட்டு காங்கிரஸ் ஒரு பேரம் பேசுகிறது. விஜய் கூட நாங்க போயிடுவோம் என்று சொல்லும்போதே ஸ்டாலின் அவர்களை போங்க’’ என்று சொல்லி இருக்கணும்’’ என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் ‘‘என்ன கருத்து சொல்றது? திமுக ஒத்துக்கொள்ளவில்லை. ஆட்சியில் பங்கு கொடுப்பதும், கொடுக்காததும் அந்த கட்சி எடுக்கிற, தலைமை எடுக்கிற முடிவு. ஆட்சியில் பங்கு என கேட்கும்போது இப்போது குறிப்பாக என் தம்பி விஜய் சொல்றாரு ‘நான் ஆட்சியில் பங்கு தருகிறேன்’ என்கிறார். என் தம்பியோட ஆட்சியில் பங்கு கொடுக்கிற அளவுக்கு இங்க எந்த கட்சி இருக்கிறது?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விஜய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க வேண்டியது இல்லை
Image Credit : Asianet News

விஜய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க வேண்டியது இல்லை

இங்கே எந்த கட்சிக்கு நேர்மை இருக்கு. யாருக்கு இந்த கட்சியை சேர்த்துக்கிட்டு ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்கிற அளவுக்கு உண்மையாய் இருக்கிறது. இந்த கட்சிகளுடைய ஆட்சி நிர்வாகம் முறை பிடிக்காமல் தான் விஜய் ஒரு கட்சி ஆரம்பிக்கிறார். அப்புறம் அந்த கட்சிகளையும் ஆட்சியிலே பங்கு தருகிறேன் என்கிறார். அவ்வளவு தூய, நேர்மையான ஆட்சி இருக்குது, கட்சி இருக்குதுன்னா விஜய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க வேண்டியது இல்லையே. ஆட்சியில் பங்கு கொடுத்தால் பிறகு விஜய் ஆட்சியின் தரம் எப்படி இருக்கும். ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிற கட்சிகள் இருக்கிறது. இந்த கட்சிகளை சேர்த்துக் கொண்டு என்ன பண்ண முடியும்?

34
 காங்கிரஸ் கட்சியினர் அமைதியாக இருந்திருப்பார்கள்
Image Credit : Asianet News

காங்கிரஸ் கட்சியினர் அமைதியாக இருந்திருப்பார்கள்

இப்போது காங்கிரசை ஆட்சியில் சேர்த்து கொள்வார் என்றே வைத்துக் கொள்வோம். ஊழலைப் பற்றி பேச முடியுமா? மாநில உரிமைகளை பற்றி பேச முடியுமா? நீங்கள் காங்கிரஸை வைத்துக்கொண்டு எதைப் பேசுவீர்கள்? முதல்வர் ஸ்டாலின் சொல்வது ரொம்ப தாமதம். அவர்கள் ஆட்சியில் பங்கு என்று கேட்டார்கள். அப்படியானால் கொடுக்குற கட்சிக்கு போங்கள் என்று ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும். அவர் அப்போதே சொல்லி இருக்க வேண்டும். ஆட்சியில் எந்த கட்சி பங்கு தருகிறதோ? அங்கே போய் வாருங்கள். எங்களுக்கு எதிர்ப்பு இல்லை, மறுப்பில்லை என்று சொல்லியிருந்தால் காங்கிரஸ் கட்சியினர் அமைதியாக இருந்திருப்பார்கள்.

44
விஜயைக் காட்டி பேரம் பேசிக்கொள்வதா?
Image Credit : Google

விஜயைக் காட்டி பேரம் பேசிக்கொள்வதா?

அதை விட்டுவிட்டு தம்பி விஜயைக் காட்டி ஒரு பேரம் பேசிக்கொள்வதா? தமிழக வெற்றி கழகத்துடன் போகிறோம் என்று சொன்னால் போங்கள் என்று ஸ்டாலின் சொல்லிருக்க வேண்டும். அது பெரியவர்கள் எடுக்கிற முடிவு. நாம் அதில் கருத்து சொல்ல முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
சீமான்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Firecracker Scam Alert: Online பட்டாசு மோசடி! சமத்தா இருந்து தப்பிச்சுக்கோங்க! அலர்ட் செய்த தமிழக அரசு!
Recommended image2
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Recommended image3
TN Rain: அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்! தமிழகத்தில் வெளுக்கப்போகும் கன‌மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Related Stories
Recommended image1
கனிமொழி ஏரியாவில் மூக்கை நுழைத்த சபரீசன்..! திமுக குடும்பத்தில் உச்சகட்ட மோதல்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved