MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ajith : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த அஜித்... ஷாலினி தயாரிப்பில் 2 படங்கள் - ஒன்னு டேர் டெவில்; இன்னொன்னு என்ன?

Ajith : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த அஜித்... ஷாலினி தயாரிப்பில் 2 படங்கள் - ஒன்னு டேர் டெவில்; இன்னொன்னு என்ன?

Ajith 2 Films Update : நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ள படங்களின் அப்டேட்டுகள் ஒரே நாளில் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த இரண்டு படங்களையும் ஷாலினி தான் தயாரிக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 04 2026, 11:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ajith Next Film
Image Credit : X

Ajith Next Film

'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த புதிய படத்திற்கு 'டேர் டெவில்' என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்ட டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 'குட் பேட் அக்லி' மூலம் வெற்றிக் கூட்டணியாக உருவெடுத்த அஜித் - ஆதிக் ஜோடி, இரண்டாவது முறையாக கைகோர்ப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Ajith: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்
Image Credit : X

ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்

இந்தப் படத்தை அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித் குமார், தனது 'Brave Hearts Production' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்திருப்பதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பட அறிவிப்பை பகிர்ந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமார் தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தயாரிப்பாளர் ஷாலினி அஜித் குமார், இசையமைப்பாளர் அனிருத், மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் முழு படக்குழுவினருக்கும் தனது நன்றியை பதிவு செய்துள்ளார். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Related image1
Ajith: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!
Related image2
Ajith Instagram Post : கனத்த இதயத்துடன் பணிக்கு திருப்புகிறேன் – புகைப்படங்களுடன் ‘தல’ அஜித் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
35
டேர் டெவில் அப்டேட்
Image Credit : X

டேர் டெவில் அப்டேட்

அனிருத் ரவிச்சந்தருக்கு இது அஜித் குமாருடன் இணையும் நான்காவது திரைப்படமாகும். இதற்கு முன்பு 'வேதாளம்', 'விவேகம்', 'விடாமுயற்சி' ஆகிய படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தார். குறிப்பாக 'வேதாளம்' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. அதனால் 'டேர் டெவில்' படத்தின் இசைக்கும் தற்போது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதுவரை படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல் படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

45
இரண்டாவது படம் என்ன?
Image Credit : X

இரண்டாவது படம் என்ன?

கடைசியாக அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் அதிரடி, நகைச்சுவை மற்றும் அவரது ஸ்டைலான திரைநடிப்பால் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் 'டேர் டெவில்' திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. டேர் டெவில் அப்டேட் வந்த கொஞ்ச நேரத்திலேயே அஜித்தின் மற்றொரு படம் பற்றிய அறிவிப்பும் வெளியானது. அப்படத்தின் பெயர் கிளாடியேட்டர்ஸ். இதையும் ஷாலினி அஜித் தான் தயாரிக்கிறார்.

55
கிளாடியேட்டர்ஸ் அப்டேட்
Image Credit : X

கிளாடியேட்டர்ஸ் அப்டேட்

கிளாடியேட்டர்ஸ் என்பது அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஒரு டாக்குமெண்ட்ரி படம். இதனை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இந்த டாக்குமெண்ட்ரி படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அஜித் கார் பந்தயத்தில் பங்கேற்றபோது எடுத்த காட்சிகள் இந்த டாக்குமெண்ட்ரியில் இடம்பெற உள்ளன. இந்த படம் ஏற்கனவே தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அஜித் படம் ரிலீஸ் ஆகுமா என ஏங்கி வந்த ரசிகர்களுக்கு இப்படம் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வாய்ப்புள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அஜித் குமார்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jason Sanjay: அடிக்கடி சண்டை வரும்; பிரிஞ்ச பிறகுதான் பாசம் வந்துச்சு - தங்கை திவ்யா பற்றி ஜேசன் சஞ்சய் உருக்கம்!
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் நாடகத்தால் பிரியப் போகும் ரேகா-சத்யா... முத்துவை அவமானப்படுத்திய விஜயா..!
Recommended image3
Ajith: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!
Related Stories
Recommended image1
Ajith: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!
Recommended image2
Ajith Instagram Post : கனத்த இதயத்துடன் பணிக்கு திருப்புகிறேன் – புகைப்படங்களுடன் ‘தல’ அஜித் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved