MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • DareDevil: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!

DareDevil: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!

Daredevil: நடிகர் அஜித்குமாரின் 64வது திரைப்படத்துக்கு 'டேர்டெவில்' என பெயர் சூட்டப்படுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்க உள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 03 2026, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அஜித்தின் அடுத்த படம் பெயர் டேர்டெவில்
Image Credit : Asianet News

அஜித்தின் அடுத்த படம் பெயர் டேர்டெவில்

தமிழ் திரையுலகில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், 'தளபதி' விஜய் ஆகியோருக்கு நிகராக முன்னணி நடிகராக வலம் வருபவர் 'தல' அஜித்குமார். இதில் விஜய் நடிப்பில் இருந்து ஒதுங்கி அரசியலில் கால்பதித்து முதல்வரும் ஆகி விட்டார். அஜித்குமாரும் கடைசியாக தனது 63வது படமான 'குட் பேட் அக்லி' திரைப்படத்துக்கு பிறகு எந்த படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். குட் பேட் அக்லிக்கு பிறகு தனது மிகவும் பிடித்தமான கார் ரேஸ்களில் பிஸியாக இருந்தார்.

பரம தொழில் போட்டியாளரான விஜய்யும் ஒதுங்கி விட்ட நிலையில், அஜித்குமாரின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வரும் என அவரது ரசிகர்கள் விழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அஜித்குமாரின் 64வது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அஜித்த்தின் அடுத்த படத்துக்கு 'டேர்டெவில்' (DAREDEVIL) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கணவர் அஜித் படத்தை தயாரிக்கும் ஷாலினி
Image Credit : others

கணவர் அஜித் படத்தை தயாரிக்கும் ஷாலினி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்திற்கு 'டேர்டெவில்' (DAREDEVIL) எனச் சூட்டப்பட்டுள்ள தலைப்புடன் கூடிய சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கலவையில், தாயக்கட்டைகளின் மீது எழுத்துக்கள் செதுக்கப்பட்டது போன்ற இதன் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அஜித்தின் புதிய பட அறிவிப்பு வெளியானது ஒருபக்கம் சர்ப்ரைஸ் என்றால் 'டேர்டெவில்' படத்தை தயாரிக்கப் போவது அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி என்பது யாரும் எதிர்பாராத சர்ப்ரைசை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. ஆம்.. அஜித் குமாரின் திரையுலக வரலாற்றிலேயே முதல்முறையாக, அவரது மனைவி ஷாலினி அஜித் குமார் தனது 'பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்' (Bravehearts Production) நிறுவனம் மூலம் 'டேர்டெவில்' படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். அஜித்குமாரின் மனைவியே நேரடியாகக் களமிறங்குவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ‍பலமடங்கு அதிகரித்துள்ளது.

Related Articles

Related image1
Shalini : அஜித் கொடுத்த கிரீன் சிக்னல்... சினிமாவில் நெக்ஸ்ட் ரவுண்டுக்கு ரெடியான ஷாலினி? ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு..!
Related image2
Ajith Instagram Post : கனத்த இதயத்துடன் பணிக்கு திருப்புகிறேன் – புகைப்படங்களுடன் ‘தல’ அஜித் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
34
சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி
Image Credit : Asianet News

சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி

ஷாலினி கடைசியாக கடந்த 2001 ஆம் ஆண்டு 'பிரியாத வரம் வேண்டும்' என்ற படத்தில் நடித்து இருந்தார். இதன்பின்பு அஜித்தும், இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், நடிப்பில் இருந்து ஷாலினி முழுமையாக ஒதுங்கினார். பல முன்னாள் நடிகைகளூம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்த நிலையில், ஷாலினியும் கம்பேக் கொடுப்பாரா? என எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. இந்த நிலையில்தான், நடிகையில் இருந்து தயாரிப்பாளராக அதுவும் அன்பான கணவரின் திரைப்படத்தின் மூலம் ஷாலினி சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

44
அஜித் - ஆதிக் காம்போ மீண்டும் சாதனை படைக்குமா?
Image Credit : Google

அஜித் - ஆதிக் காம்போ மீண்டும் சாதனை படைக்குமா?

ஏற்கனவே அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் வசூல் சாதனை படைத்த நிலையில், இந்த வெற்றி காம்போ மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களை கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அஜித்தின் 'டேர்டெவில்' திரைப்படத்துக்கு 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஒளிப்பதிவு: அபினந்தன் ராமானுஜம், படத்தொகுப்பு: விஜய் வேலுக்குட்டி, சண்டைப் பயிற்சி: சுப்ரீம் சுந்தர், ஆடை வடிவமைப்பு: அனு வர்தன் என திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர். படத்தின் ஹீரோயின் மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் தேதிகள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அஜித் குமார்
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Big Budget Movies: கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 மெகா பட்ஜெட் மூவீஸ்!
Recommended image2
Keerthy Suresh: ஒரு பாட்டுக்கு 1 கோடி சம்பளமா? காட்டுத்தீ போல் பரவிய தகவல்... 'தி பாரடைஸ்' படக்குழு விளக்கம்
Recommended image3
OTT Releases : இதயம் முரளி முதல் வதந்தி 2 வரை... இந்த வாரம் ஓடிடியில் தூள் கிளப்ப வரும் படங்கள் & வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
Shalini : அஜித் கொடுத்த கிரீன் சிக்னல்... சினிமாவில் நெக்ஸ்ட் ரவுண்டுக்கு ரெடியான ஷாலினி? ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு..!
Recommended image2
Ajith Instagram Post : கனத்த இதயத்துடன் பணிக்கு திருப்புகிறேன் – புகைப்படங்களுடன் ‘தல’ அஜித் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved