திரைப்படத் தயாரிப்பு மட்டுமின்றி, தொலைக்காட்சித் துறையிலும் சி.ஜே. ராய் தீவிரமாக இருந்தார். பிக் பாஸ் கன்னட சீசன் 11-க்கு கான்ஃபிடன்ட் குரூப் ஸ்பான்சர் செய்தது. 

கான்ஃபிடன்ட் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் இன்று பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து இன்று அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது அவர் தன்னைத் தானே துப்ப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரைத்துறையிலும் கோலோச்சிய சி.ஜே. ராய்

கான்ஃபிடன்ட் குரூப் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்கிய நிலையில், சி.ஜே. ராயின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் அதிபர் என்பதைத் தாண்டி, திரைப்படத் தயாரிப்பிலும் சி.ஜே. ராய் தீவிரமாக இருந்தார். பாவனாவின் 90வது படமாக உருவாகும் 'அனோமி' என்ற படத்தின் தயாரிப்பு பங்குதாரராகவும் சி.ஜே. ராய் இருந்தார்.

மோகன்லால் பட தயாரிப்பாளர்

மோகன்லால் நாயகனாக நடித்த, ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய 'காசனோவா' படத்தின் மூலம் கான்ஃபிடன்ட் குரூப் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது. பின்னர், சித்திக் இயக்கிய 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்' படத்தையும் சி.ஜே. ராய் தயாரித்தார். இந்தப் படம் 2013-ல் வெளியானது.

மரைக்காயர், அரபிக்கடலின் சிங்கம்

'வெள்ளிமூங்கா' படம் மூலம் பிரபலமான ஜிபு ஜேக்கப் இயக்கிய சுரேஷ் கோபியின் 'மே ஹூம் மூசா' மற்றும் மோகன்லால் நாயகனாக நடித்த பிரியதர்ஷன் இயக்கிய பிரம்மாண்ட படமான 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' ஆகியவற்றின் தயாரிப்புப் பணிகளிலும் சி.ஜே. ராய் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆண்டு வெளியான, டோவினோ தாமஸ் நடித்த 'ஐடென்டிட்டி' படத்தையும் சி.ஜே. ராயின் கான்ஃபிடன்ட் குரூப் தயாரித்தது.

தொலைக்காட்சித் துறையிலும் ஸ்பான்சர்

திரைப்படத் தயாரிப்பு மட்டுமின்றி, தொலைக்காட்சித் துறையிலும் சி.ஜே. ராய் தீவிரமாக இருந்தார். பிக் பாஸ் கன்னட சீசன் 11-க்கு கான்ஃபிடன்ட் குரூப் ஸ்பான்சர் செய்தது. மேலும், ஸ்டார் சுவர்ணாவின் ஸ்டார் சிங்கர் மியூசிக் ரியாலிட்டி ஷோவையும் கான்ஃபிடன்ட் குரூப் ஸ்பான்சர் செய்தது. மலையாள பிக் பாஸ் சீசன் 7 ரன்னர்-அப் அனீஷ் டி.ஏ-க்கு நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியதும் விவாதமானது என்பது குறிப்பிடத்தக்கது.