லியோ ஒரு குப்பை படம்.. வம்பிழுக்கும் மீசை ராஜேந்திரன் - விஜய் வந்து சொல்றப்ப மீசையை எடுக்கிறேன் என்று சூளுரை!
தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்பட வசூலை தாண்டாது, அப்படி தாண்டினால் என் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.
Leo Movie
தனது முறுக்கு மீசைக்காக புகழ்பெற்ற நடிகர் தான் மீசை ராஜேந்திரன், பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் இவர், அண்மையில் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்படம், ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை தாண்டினால், நான் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய அளவில் இந்த ஆண்டு வெளியான அனைத்து திரைப்படங்களுடைய முதல் நாள் வசூலை முறியடித்து, முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது லியோ திரைப்படம். இதனை அடுத்து தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று ஜக வாங்கி உள்ளார் மீசை ராஜேந்திரன்.
Jailer box office
இன்று ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள மீசை ராஜேந்திரன் அவர்கள், அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்ட லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஒரு அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளார். மேலும் லியோ திரைப்படம் எல்சியு அல்ல அதை பார்க்கும் அனைவருக்கும் அது ICU-வாக உள்ளது என்று கூறியவர், லியோ திரைப்படம் ஒரு குப்பை திரைப்படம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actor Rajendran
மேலும் இதுவரை ஜெயிலர் திரைப்பட வசூலை தாண்டினால் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறிய ராஜேந்திரன் அவர்கள், இப்பொது 2.0 திரைப்படத்தின் 800 கோடி ரூபாய் வசூலை லியோ திரைப்படம் தாண்டினால் மீசையை எடுத்துக் கொள்கிறேன். அதுவும் விஜய் அவர்களே வந்து என்னிடம் வசூல் நிலவரத்தை சொன்னால் மட்டுமே மீசையை எடுத்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார் அவர்.