Chandramukhi 2 On OTT: 'சந்திரமுகி 2' ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியாக அதிகார பூர்வ அறிவிப்பு..!
ராகவா லாரன்ஸ், வேட்டைய மன்னனாக நடித்து, கடந்த மாதம் வெளியான 'சந்திரமுகி 2' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தை, இயக்குனர் பி.வாசு சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்னர், இயக்கினார். 'சந்திரமுகி 2' படத்தின் கதையை முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் வாசு கூறிய நிலையில், அவருக்கு கதையில் திருப்தி இல்லாததால், பல முறை கதையில் மாற்றம் செய்யப்பட்டது.
chandramukhi 2
ஆனால் தொடர்ந்து ரஜினிகாந்த் 'சந்திரமுகி 2' கதையை நிராகரித்த நிலையில், பின்னர் உடல்நிலை கருதி இந்த படத்தில் நடிக்க முடியாது என கடந்த 2019 ஆம் ஆண்டு கூறினார். இதை தொடர்ந்து தான் ராகவா லாரன்ஸை வைத்து 'சந்திரமுகி 2' படத்தை இயக்க பி.வாசு முடிவு செய்தார். கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடஞ்சல்களை தாண்டி இப்படம் உருவான நிலையில் கடந்த மாதம் மிக பிரமாண்டமாக வெளியானது.
மீண்டும் இடையழகை காட்டிய ரம்யா பாண்டியன்! பாவாடை - ஜாக்கெட் மட்டும் அணிந்து தாவணி போடாமல் ஹாட் போஸ்!
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், அதிக அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும், முதலுக்கு மோசம் இல்லாத வசூலை பெற்றது. முதல் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்த நிலையில், இரண்டாவது பாகத்தில், பாலிவுட் நடிகை கங்கனா நடித்திருந்தார். இவரின் நடிப்பு சில விமர்சனங்களுக்கு ஆளானது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், தற்போது 'சந்திரமுகி 2' படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை கைப்பற்றியுள்ள, நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் அக்டோபர் 26-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.