Thalapathy 68: வேற லெவல் அப்டேட்... மிரட்டல் நாயகனை ஸ்கெச் போட்டு தளபதி 68 படத்தில் களமிறங்கிய வெங்கட் பிரபு!
நடிகர் விஜய் அடுத்ததாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள தளபதி 68 திரைப்படத்தில், பிரபல முன்னணி நடிகர் கமிட் ஆகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படம், தற்போது ரிலீசாகி திரையரங்குகளில் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தை, இயக்குனரும் நடிகருமான வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
Thalapathy 68 Update
இப்படத்தை ஏற்கனவே தளபதியை வைத்து, 'பிகில்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் அவ்வப்போது வெளியாகி வருவது வழக்கமாக மாறியுள்ள நிலையில், சமீபத்தில் 'ஹாரா' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு பின்னர் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ள மைக் மோகன் வில்லனாக நடிப்பது உறுதியானது.
Thalapathy 68 Update
மேலும் சினேகா, தெலுங்கு நடிகை மீனாட்சி செளத்ரி, லைலா, பிரசாந்த், பிரபுதேவா போன்ற பலர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இவர்களை தொடர்ந்து, மற்றொரு மிரட்டல் நாயகனை, வெங்கட் பிரபு ஸ்கெச் போட்டு இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வெறும் யாரும் அல்ல, ஏற்கனவே தளபதி விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கி, சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த இயக்குனரும், 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு நிராகரான வில்லன் வேடத்தில் மிரட்டியவருமான எஸ்.ஜே.சூர்யா தான். மார்க் ஆண்டனி படத்தில், இவரின் நடிப்பு வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்ட நிலையில், வெங்கட் பிரபு எஸ்.ஜே.சூர்யாவை ஸ்கெச் போட்டு படத்தின் உள்ளே இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Vanitha Son in Leo: 'லியோ' படத்தில் பிக்பாஸ் வனிதாவின் மகன்..! இதை நோட் பண்ணுனீங்களா?
இயக்குனர் வெங்கட் பிரபு, லியோ படத்தின் ரிலீசுக்கு பின்னர் தளபதி 68 படம் குறித்த அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என கூறி இருந்த நிலையில்... இந்த தகவலையும் விரைவில் படக்குழு அதிகார பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D