பாகிஸ்தானை பந்தாடிய ஆரோன் ஜான்சன் – கனடா 106 ரன்கள் குவிப்பு!
பாகிஸ்தானிற்கு எதிரான 22ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
Pakistan vs Canada, T20 World Cup 2024
கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 22ஆவது போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய கனடா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.
Pakistan vs Canada, T20 World Cup 2024
ஆரோன் ஜான்சன் மற்றும் நவ்னித் தலிவால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தலிவால் 4 ரன்களில் ஆட்டமிழக்க, பர்கத் சிங் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். நிக்கோலஸ் கிர்தன் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். ஷ்ரேயாஸ் மோவ்வா 2, ரவீந்தர்பால் சிங் 0 ரன்களில் ஆட்டமிழக்க, தொடக்க வீரர் ஆரோன் ஜான்சன் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.
Pakistan vs Canada, T20 World Cup 2024
ஷாத் பின் ஜாஃபர் 10 ரன்கள் எடுக்கவே, கலீமா சனா 13 ரன்களும், தில்லியோன் ஹெலிகெர் 9 ரன்களும் எடுக்கவே கனடா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பாகிஸ்தான் அணியில் ஹரீஷ் ராஃப் மற்றும் முகமது அமீர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Pakistan vs Canada, T20 World Cup 2024
ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடி வருகிறது.
Pakistan vs Canada, T20 World Cup 2024
இந்தப் போட்டியில் 14 ஓவர்களுக்குள் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் நெட் ரன் ரேட் அடிப்படையில் அமெரிக்காவின் நெட் ரன் ரேட்டை விட அதிகமாக நெட் ரன் ரேட் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Pakistan vs Canada, T20 World Cup 2024
இதன் மூலமாக பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உண்டாகும். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. கடைசியாக அயர்லாந்திற்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.