Vijay Devarakonda: ஜாதகத்தின் படி பெயரை மாற்றுகிறாரா விஜய் தேவரகொண்டா! பரபரப்பு முடிவுக்கு காரணம் என்ன?
தென்னிந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஹீரோவாக இருக்கும் விஜய் தேவரகொண்டா தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. இதன் பின்னணி மற்றும் காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Vijay Devarakonda
நடிகர் விஜய் தேவரகொண்டா, அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்களில் நடித்து.. தனக்கென ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்வை உருவாக்கியவர். இவருக்கான ஃபேன் பேஸ் குறையாமல் இருந்தாலும், ஏனோ இவர் நடிக்கும் படங்கள் தான் சரியாக இவருக்கு கை கொடுக்க தவறி விடுகிறது.
Vijay Devarakonda
நேசனல் கிரஷ் ராஷ்மிகாவுடன் காதல் சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். ராஷ்மிகாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பின்னர் தான் விஜய் தேவரகொண்டாவுக்கு எந்த படமும் ஹிட்டாக மாட்டேங்குது என்கிற பேச்சும் அடிபட்டு வருகிறது.
Kali Venkat: காளி வெங்கட் ஜோடியாக 'தோனிமா' படத்தில் நடித்துள்ள பாலா பட இளம் ஹீரோயின்! யார் தெரியுமா?
Vijay devarakonda
உண்மையை சொல்ல போனால், கீதா கோவிந்தம் படம் தான்... வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது, டாக்ஸிவாலா சுமாரான விமர்சனத்தை பெற்றாலும், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த 'லிகர்' படு தோல்வியை சந்தித்தது.
அதே போல் குஷி மற்றும் சமீபத்தில் வந்த ஃபேமிலி ஸ்டார் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தன்னுடைய மாஸ் இமேஜை தக்கவைத்து கொள்ள கண்டிப்பாக ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் விஜய்.
Actor Vijay Devarakonda
மேலும் விஜய் தேவரைக்கொண்ட படங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது குறித்து அவரது ஜாதகத்தை, அவரின் அம்மா குடும்ப ஜோசியரிடம் காட்டிய போது... ஜாதகப்படி அவருடைய பெயரை மாற்றம் செய்யலாம் என ஐடியா கொடுத்துள்ளதாகவும், எனவே தன்னுடைய தாயாருக்காக விஜய் தேவரகொண்டா பெயரை மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம் இவரின் பெயருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு வைப் உள்ள நிலையில்... இப்படி ஒரு முடிவை விஜய் கண்டிப்பாக எடுக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இப்படி பட்ட தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தாலும், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை தெரிந்து கொள்ள கார்த்திருப்போம்.